இந்திய கிரிக்கெட்

பிரசித் கிருஷ்ணாவுக்கு நீங்க செஞ்ச அது நியாயமே இல்ல.. சிராஜுக்கு தங்க இதயம்.. நெகிழ வைத்துவிட்டார் – அஸ்வின் பேட்டி

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கின்ற காரணத்தினால் போட்டி மிகவும் பரபரப்பான நிலையை அடைந்திருக்கிறது.

பிரசித் கிருஷ்ணா மீதான விமர்சனம்

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா சிறப்பான முறையில் பந்து வீசினார். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருடைய பந்துவீச்சு நல்ல முறையில் அமையவில்லை. இதன் காரணமாக பிரசித் கிருஷ்ணா மீது விமர்சனத்தை அதிகமாக்கியது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் அவரை இந்த போட்டியில் சேர்த்து இருக்கக் கூடாது என பலரும் கூறி வந்தார்கள். தற்போது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சங்கட்டமாக இருக்கும்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “தற்போது சமூக வலைதள காலத்தில் மக்கள் எளிதாக ஒவ்வொருவரையும் விமர்சனத்திற்கு பிடித்துக் கொள்கிறார்கள். பிரசித் கிருஷ்ணாவை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க கூடாது என்று பேசி வந்தார்கள். அவரை தேர்வாளர்களும் பயிற்சியாளர்களும் இந்திய கிரிக்கெட்டில் அரிய பண்டம் என்பது போல் பார்க்கவில்லை. இதை அவர் உணரும் பொழுது அவருக்கு சங்கடமாக இருக்கும்”

இதையும் படிங்க: ஜஸ்ஸி பாய் ஏன் போறீங்க?.. நான் அதை செஞ்சா யார்கூட கொண்டாடுவதுனு கேட்டேன் – சிராஜ் உருக்கமான பேச்சு

“இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் நினைவாக இங்கிலாந்து வீரர்கள் தலையில் பட்டை அணிந்து விளையாடினார்கள். அடுத்து சிராஜ் அதே பட்டையை அணிந்து விளையாடினார். உண்மையில் அவருக்கு கிரஹாம் தோர்ப் பற்றி தெரிந்து இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு அதை செய்யும் தங்க இதயம் இருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -
Published by