ஜஸ்ஸி பாய் ஏன் போறீங்க?.. நான் அதை செஞ்சா யார்கூட கொண்டாடுவதுனு கேட்டேன் – சிராஜ் உருக்கமான பேச்சு

0
216
Siraj

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் பந்துவீச்சில் திருப்புமுனையை உண்டாக்கிய முகமது சிராஜ் பும்ரா குறித்து மிகவும் உருக்கமான முறையில் பேசியிருக்கிறார்.

நடப்பு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 17 விக்கெட்டுகள் உடன் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் முதல் இடத்தில் இருந்தார். இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி மொத்தம் 18 விக்கெட் உடன் முகமது சிராஜ் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றிருக்கிறார். பும்ரா மூன்று போட்டியில் 14 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

சிராஜின் வினோதம்

இந்திய டெஸ்ட் அணியில் பும்ராவுடன் இணைந்து சிராஜ் விளையாடும் பொழுது அவர் விக்கெட் எடுப்பது மிகவும் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் பும்ரா இல்லாமல் விளையாடும் பொழுது சிராஜ் அதிக அளவில் விக்கெட் கைப்பற்றி வருகிறார். இந்த வினோத புள்ளி விபரம் அவரையும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

நேற்று இரண்டாவது செஷனில் ஒல்லி போப், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரது விக்கெட்டுகளை முதலில் கைப்பற்றி இந்திய அணியை போட்டிக்குள் கொண்டு வந்தார். இறுதியில் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து இன்னிங்ஸை முடித்து வைத்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விளையாடாத பும்ரா குறித்து சிராஜ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

எங்க போறீங்க பாய்?

இது குறித்து பேசி உள்ள சிராஜ் கூறும்பொழுது ” நான் பும்ரா பாயிடம் ‘பாய் எங்க போறீங்க? நான் ஐந்து விக்கெட் எடுக்கும் பொழுது நீங்கள் இல்லை என்றால் நான் யாரை கட்டிப்பிடிப்பேன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘நான் இங்குதான் இருப்பேன் நீங்கள் சென்று ஐந்து விக்கெட் எடுங்கள்’ என்று கூறினார் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : என் காலமா இருந்தா ஆகாஷ் தீப்புக்கு நடக்கிறதே வேற.. டக்கெட் ஓகே – இங்கிலாந்து கோச் பேட்டி

மேலும் பும்ரா குறித்து பிரசித் கிருஷ்ணா பேசும் பொழுது “இந்திய அணிக்குள் நட்புறவை பேணுவதில் பும்ரா பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். நாம் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் வெற்றியை அனுபவிப்பது அணியில் நட்புறவை பேணுவதற்கு முக்கிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே மைதானத்தில் இருக்கும் பொழுது கலந்து பேசி கொள்ளுதல் உங்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். இது மட்டுமே அணியை சிறந்ததாக மாற்றும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -