கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

4,6,4,4,1,4  ஒரே ஓவரில் பிரசித் கிருஷ்ணா 23 ரன்கள்.. தொடரும் சொதப்பல்.. எதுக்கு அணியில் இருக்காருனே தெரியல

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு பந்துவீச்சு மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருந்தது. குறிப்பாக பிரசித் கிருஷ்ணா ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய  வீரர்கள் அபாரமாக விளையாடி வந்தனர்.
பந்துவீச்சிலும் இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக நேற்று ஆகாஷ் தீப் ஒரே ஓவரில் தொடர்ந்து இரண்டு விக்கெட் வீழ்த்திய நிலையில் இன்று முகம்மது சிராஜ் ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்

ஒரே ஒவரில் 23 ரன்கள்:

ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தினார். இதனால் இங்கிலாந்து அணி 84 ரன்கள் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த சூழலில் பிரசித் கிருஷ்ணா கைக்கு பந்து சென்றது. அவர் வழக்கம் போல் ஏதோ டி20 கிரிக்கெட்டில் ரன்களை விட்டுக் கொடுப்பது போல் விட்டுக் கொடுத்தார்.

குறிப்பாக ஜெமி ஸ்மித், பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் 32 வது ஓவரில் ஒரு சிக்ஸ், நான்கு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதன் மூலம் அந்த ஓவரின் 23 ரன்கள் சென்றது. பிரசிக் கிருஷ்ணா ஆறு ஓவர் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றார்.

- Advertisement -

ரசிகர்கள் கோபம்:

பிரசித் தன்னுடைய எக்னாமி சரி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் மோசமாக செயல்பட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.இதனால் கிருஷ்ணாவுக்கு பதில் குல்தீப் யாதவை இந்திய அணி சேர்த்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: கிரிக்கெட்ட கண்டுபிடிச்ச உங்களுக்கே இந்த அடியா.. 25 வயசு கில் மிராக்கிள் – பல்டி அடித்த ஸ்ரீகாந்த்

ஆனால், கம்பீர் தவறான முடிவை எடுத்து விட்டதாக பலரும் குற்றச்சாட்டி உள்ளனர். பிரசித் கிருஷ்ணா ஒருவரால் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோற்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஐந்து விக்கெட்டுகளை இழந்த பிறகு ஹாரி புரூக், ஜெமி ஸ்மித் ஜோடி கண்ணிமைக்கும் நேரத்தில் 100 ரன்கள் மேல் சேர்த்து உள்ளது. கடைசி பத்து ஓவரில் மட்டும் அந்த அணி 79 ரன்களை எடுத்து இருக்கின்றது.

- Advertisement -
Published by