கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தில் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய கேப்டன் கில் அசத்தி இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 587 ரன்கள் குவித்திருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் வில் சிறப்பாக விளையாடி 269 ரன்கள் எடுத்திருக்கிறார்.
கில் மீதான ஸ்ரீகாந்த் விமர்சனம்
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கில் மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அவரை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பேசி வந்தார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் என்னுடைய அணியில் கில்லுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்று பேசி இருந்தார்.
இப்படி தொடர்ந்து கில் மீது விமர்சனங்களை ஸ்ரீகாந்த் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக கில் விளையாடி வருவதால், தற்போது தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு அவரை ஆதரித்து ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
25 வயது பையனின் அசத்தல்
நேற்று வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழக்காமல் இன்னும் 10 ஓவர்கள் விளையாடு இருந்தால் கில் 300 ரன்கள் எடுத்திருப்பார். ஆடுகளம் இருந்த நிலைக்கும், கில் காட்டிய கவனத்திற்கும் நிச்சயம் முச்சதம் அடித்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் ஆரம்பத்துல கில்லை திட்டினது உண்மை.. ஆனா இப்ப அதை மாத்திக்கிறேன்.. காரணம் இதுதான் – மைக்கேல் வாகன் பேட்டி
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “கிரிக்கெட்டை கண்டுபிடித்த மண்ணில் 25 வயது பையன் இப்படியான சாதனையை படைக்கும் பொழுது வேறு என்ன சொல்ல முடியும்! என்ன ஒரு அடி! நான் அவரிடமிருந்து முச்சதத்தை எதிர்பார்த்தேன். ஆனால் இந்த இளம் ஜாம்பவான் ஆட்டத்தை பார்த்தால் அவர் எதிர்காலத்தில் நிச்சயம் முச்சதம் அடிப்பார்” என்பது உறுதி என்று கூறியிருக்கிறார்.






