ஸ்பின்னரா சொல்றேன்.. விராட் கோலி இந்த விஷயத்தை சரி பண்ணனும்.. இல்லனா கஷ்டம் – ஓஜா அட்வைஸ்

0
28
Virat

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் சிறப்பாக இருக்கும் விராட் கோலி ஒரு முக்கிய விஷயத்தை தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் இடது கை சுழல் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா கூறியிருக்கிறார்.

இந்திய அணி செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரம் வரையில் மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் உள்நாட்டில் ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளிலும் விளையாடுகிறது.

- Advertisement -

விராட் கோலிக்கு திடீரென ஏற்பட்ட பிரச்சனை

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி 2019 ஆம் ஆண்டு வரையில் 54.8 ரன் சராசரி வைத்திருந்தார். தற்போது அவரது டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 49.5 ரன் எனக் குறைந்திருக்கிறது.மேலும் 2020 முதல் 2021 ஆம் ஆண்டு முடிவின் வரை பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருந்த பொழுது அவருடைய சராசரி 26.2 என மோசமாக இருந்தது. மேலும் அவர் எந்த சதமும் அடிக்கவில்லை.

இதற்குப் பிறகு அவர் மீண்டும் வந்தாலும் கூட அது முழுமையான ஒன்றாக இல்லை. ஏனென்றால் அவர் தன்னுடைய பேட்டிங் சரிவுக்கு பிறகான காலத்தில் இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் தடுமாற்றம் கொண்டவராக இருக்கிறார். இது டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் என்று இல்லாமல் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு பாதிப்பாக இருக்கிறது.

- Advertisement -

விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு வரையில் 53 இன்னிங்ஸ்களில் 775 ரன்களை 110 ரன் ஆவரேஜில் எடுத்திருக்கிறார். ஏழு முறை மட்டுமே இவர்களிடம் ஆட்டம் வளர்ந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் இருந்து 25 இன்னிங்ஸ்களில் 30.2 ரன் ஆவரேஜில் 272 ரன் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் 9 முறை ஆட்டமிருந்திருக்கிறார் என்பது தான் கவலையான விஷயமாக இருக்கிறது.

விராட் கோலி சரி செய்ய வேண்டும்

இதுகுறித்து பிரக்யான் ஓஜா கூறும்போது “விராட் கோலி போன்ற வீரர்களை நீங்கள் பேசும்பொழுது அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சவால்கள் இருக்கும் காலம் வரத்தான் செய்யும். இப்படியான நேரத்தில் நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். லெஜெண்டுகள் இதைச் செய்வார்கள். விராட் கோலி இதில் பரிணாம வளர்ச்சி அடைவார் என்று நான் நம்புகிறேன்.

இதையும் படிங்க : 3வது நடுவரே இல்லை.. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து போட்டியில் வினோதம்.. பின்னணி காரணம் என்ன?

பெரிய வீரர்கள் தங்கள் சவால்களை எதிர் கொண்டார்கள் மேலும் அதை சமாளித்தார்கள். விராட் கோலியும் அதே வழியில் இதையெல்லாம் சமாளிப்பார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி 50 அல்லது 60 ரன்கள் எடுத்தால் கூட, அது அவருடைய பேட்டிங் தோல்வியாக பார்க்கப்படும் அளவுக்கு பெரிதாக சாதித்திருக்கிறார். இந்திய அணிக்கு இப்படித்தான் அவர் இருந்து வந்திருக்கிறார். எனவே அவர் தன்னுடைய வேலை செயல் முறையின் அடிப்படையில் சரி செய்து விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -