எங்களுக்கு 19 வயசு.. அப்பவே யாரும் சொல்லாத அட்வைஸ ரோகித் எனக்கு சொன்னாரு – ஓஜா வெளியிட்ட தகவல்

0
93
Rohit

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவும், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜாவும் மிக நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் தாங்கள் இந்திய அண்டர் 19 அணியில் விளையாடிய காலகட்டத்திலேயே ரோகித் சர்மா தனக்கு கூறிய மிகச்சிறந்த அறிவுரையை ரோஜா கூறியிருக்கிறார்.

இருவரும் இந்திய அண்டர் 19 அணியில் ஒன்றாக விளையாடியதுடன், ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி, 2009ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றிய அணியில் இடம் பிடித்திருந்தார்கள். மேற்கொண்டு இருவரும் இந்திய அணியிலும் அறிமுகமாகி விளையாடினார்கள்.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சில நாட்கள் பழகியவர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். ரோஹித் சர்மா பார்க்கக்கூடிய எல்லா நபர்களிடமும் ஒரே மாதிரி நட்புடன் பழகக் கூடியவர். ஆனால் பிரகியான் ஓஜா சிறுவயது கிரிக்கெட் விளையாடும் முதல் ஒன்றாக இருந்ததால் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் இறுக்கமான நட்பு இருக்கிறது.

இந்த நிலையில் ரோகித் சர்மா இந்திய அண்டர் 19 அணியில் விளையாடும் காலகட்டத்திலேயே இந்திய அணியில் இடம் பெறுவதற்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மிகச் சிறந்த அறிவுரையை தனக்கு வழங்கி உள்ளதாக ஓஜா கூறியிருக்கிறார். மேலும் கிரிக்கெட் உலகில் தான் பந்து வீசுவது யாருக்கு கடினமாக இருந்தது? என்றும் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஓஜா கூறும் பொழுது “நானும் ரோகித் சர்மாவும் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடும் பொழுது, எனக்கு அவரிடம் இருந்து சிறந்த அறிவுரை ஒன்று கிடைத்தது. அவர் எனக்கு கூறுகையில் ‘அனைவருமே நாட்டிற்காக விளையாட விரும்புகிறார்கள். நாம் அண்டர் 19 அணியில் விளையாட வந்திருக்கிறோம்.ஆனால் நீங்கள் நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாட விரும்பினால் நீங்கள் ஒரு மேட்ச் வின்னராக மாற வேண்டும்’ என்று அறிவுரை கூறினார்.

இதையும் படிங்க : பங்களாதேஷ் டெஸ்ட் : பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபருக்கு பொறுப்பு மறுப்பு.. இளம் துணை கேப்டன்

குறிப்பாக டி20 கிரிக்கெட் வடிவத்தில் கிறிஸ் கெயிலுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அவர் இடது கை சுழல் பந்துவீச்சு மற்றும் லெக் ஸ்பின் ஆகியவற்றிற்கு எதிராக மிக அதிரடியாக விளையாடினார். ஆனாலும் நான் அவருக்கு எதிராக பந்து வீசியதை ரசித்தேன். மேலும் என்னுடைய பந்துவீச்சு தீவிரத்தை அதிகமாக்கினேன். இருந்தாலும் கூட மைதானத்திற்கு வெளியே அவர் மிகவும் வேடிக்கையான மற்றும் சூழ்நிலையை மகிழ்வாக வைத்திருக்கக் கூடிய நபர் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -