பங்களாதேஷ் டெஸ்ட் : பாகிஸ்தான் அணி அறிவிப்பு.. பாபருக்கு பொறுப்பு மறுப்பு.. இளம் துணை கேப்டன்

0
604
Pakistan

பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்குமீண்டும் பாபர் அசாம் கேப்டனாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோற்று முதல் சுற்று உடன் வெளியேறி வந்த காரணத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய பயிற்சியாளர்கள் கொண்டுவரப்பட்டு, வீரர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பங்களாதேஷ் அணி இந்த மாதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி பாகிஸ்தான் சென்று அந்த அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக ஷான் மசூத் தொடர்கிறார். மேலும் துணை கேப்டனாக 23 வயதான சவுத் ஷகீல அறிவிக்கப்பட்டிருக்கிறார். மொத்தமாக ஏற்கனவே விளையாடிய 13 வீரர்கள் திரும்ப அணிக்குள் இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் 16 பேர் கொண்ட அணியில் முகமது ஹூரைரா, கம்ரான் குலம் மற்றும் முகமது அலி என மூன்று புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக இமாம் உல் ஹக் தேர்வு செய்யப்படவில்லை. அவர் டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோலி டாப் 3ல் இல்லை.. பாபர் அசாம் தான் அதில் முதலிடம்.. முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பேட்டி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி :

ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (து.கே), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசம், கம்ரான் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது (வி.கீ) மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி

- Advertisement -