ஐபிஎல் 2021: சாம் கரனுக்கு மாற்று வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வாய்ப்புள்ள 5 வீரர்கள்

0
2078
Sam Curran Replacement options

பாதியில் நின்றுபோன ஐபிஎல் தொடர் மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 20-ம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கையில், அந்தக் குறிப்பிட்ட நாட்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சில வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை அணியில் விளையாட வரும் சாம் கரன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம், எனவே அவருக்கு பதிலாக வேறு எந்த வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது என்று தற்போது பார்ப்போம்

- Advertisement -

1. டேவிட் கான்வாய்

நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இவர் தற்போது அனைத்து வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிக அற்புதமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார், இதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் 14 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்திருக்கிறார். டி20 போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 59.12 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151.12 ஆகும். நான்கு அரை சதங்களும் குவித்திருக்கிறார். டி20 போட்டியில் மிக சிறப்பாக அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால், நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தங்களது அணியில் விளையாட வைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

2. வணின்டு ஹசரங்கா

இலங்கையை சேர்ந்த இவர் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இலங்கை பிரீமியர் லீக்கில் மிக அற்புதமாக விளையாடினார். லெக் ஸ்பின் போடக்கூடிய ஆல்ரவுண்டர் வீரரான இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சென்னை அணிக்கு தன்னுடைய பலத்தை சேர்ப்பார்.

- Advertisement -

எனவே நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரும் ஒரு வீரராக விளையாட அதிக வாய்ப்பிருக்கிறது என்று நாம் எதிர்பார்க்கலாம்.

3. இசுரு உடனா

இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 2020 ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார் இருப்பினும் அவ்வளவு சிறப்பாக பவுலின் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் பெங்களூர் அணிக்கு தன்னுடைய முழு திறமையை காண்பிக்க தவறினார்.

எனினும் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் சென்னை அணியில் விளையாடினார் நிச்சயமாக பேட்டிங் மற்றும் பவுலின் இரண்டும் பலப்படும். எனவே இவரும் ஒரு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

4. காலின் டி கிரானட்ஹோமி

நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் வீரரான இவர் பெங்களூர் அணியில் விளையாடி இருக்கிறார். பெங்களூர் அணியில் இவர் சிறப்பாக விளையாட காரணத்தினால், பின்னர் பெங்களூரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இன்னும் 20 கிரிக்கெட் போட்டியில் இவர் அதிரடியாக விளையாட கூடிய ஒரு வீரர். அதேசமயம் பவுலிங்கிலும் சில நேரம் மிக முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுப்பார். இவரை விளையாட வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நிச்சயமாக யோசிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம், எனவே அதன் அடிப்படையில் இவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

5. கேவின் ஓ பிரையன்

இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள் மிக அற்புதமாக அதிரடியாக விளையாட கூடிய அயர்லாந்து கிரிக்கெட் வீரர். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் மிக அற்புதமாக அதேசமயம் அதிரடியாக அடித்து விளையாடுவார்.

37 வயதான இவருக்கு நிறைய கிரிக்கெட் அனுபவம் இருக்கும். இவரை அணியில் எடுப்பதன் மூலம் சென்னை அணியின் பேட்டிங் வரிசை சற்று பலப்படும். எனவே சாம் கரனுக்கு மாற்று வீரராக இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.