தோனி ஸ்டைலுக்கு பிளமிங் அப்படியே எதிரானவர் ; அவர்கிட்ட ஈகோவே கிடையாது – பாப் டு பிளிசிஸ் பரபரப்பான பேச்சு!

0
3530
Faf

தென்னாப்பிரிக்க சர்வதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் வீரருமான பாப் டு பிளிசிஸ் ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான வெளிநாட்டு பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார்!

2012 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடருக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் உள்ளே வந்தவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டு தடை பெற்ற காலத்திலும், மகேந்திர சிங் தோனி அங்கம் வகித்த புனே அணியில் விளையாடினார்.

- Advertisement -

பிறகு மீண்டும் 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி வர அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை மீண்டும் ஏலத்தில் வாங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. அதற்கு அடுத்த ஆண்டு மிகச் சிறப்பாக எழுந்து வந்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதில் துவக்க வீரராக பாப் டு பிளிசிஸ் பங்கு மிகப் பெரியதாக இருந்தது.

2012 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட இணைவு 2021 ஆம் ஆண்டு உடன் முடிவு பெற்றது. 10 ஆண்டுகள் அவர்களுடன் பாப் இணைப்பில் இருந்தார். அதற்கு அடுத்து தற்பொழுது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாகவும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருக்கிறார்.

- Advertisement -

இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உடன் தனக்கு இருந்த நட்பு நெருக்கம் குறித்து சமீபத்தில் தான் எழுதிய குறிப்பில் மனம் திறந்து கூறியிருக்கிறார்.

ஸ்டீபன் பிளமிங் குறித்து பாப் எழுதி இருப்பது ” தோனியின் அணுகுமுறை மற்றும் ஸ்டைலுக்கு அப்படியே நேர் எதிரானவர் பிளமிங். நான் உள்ளே வந்த பொழுது நாங்கள் இருவரும் ஒத்திருப்போம் என்று நினைத்தேன்.

ஏனென்றால் விரிவான திட்டமிடல், பயிற்சி மற்றும் கூட்டங்களில் வெளிப்படும் தலைமைத்துவத்திற்கான கட்டமைக்கப்பட்ட முறைகளை நான் மதிப்பிட்டேன்.

பத்து வருடத்தில் நான் அவரை ஒரு மேனேஜராக மிகவும் ரசித்தேன். அவர் அரவணைப்பு மற்றும் ஆர்வம் உள்ளவர். அவர் அற்புதமான நகைச்சுவை உணர்வையும் கொண்டவர்.

மேலும் அவர் வீரர்களுடனும் அணி நிர்வாகத்துடனும் உடனுக்குடன் தொடர்பை ஏற்படுத்தக் கூடியவர். அவரது பாணி ஒவ்வொரு வீரர்களையும் அவர்களது பாணியில் மேம்படுத்துகிறது.

இது மட்டும் இல்லாமல் அவர் ஒரு சிறந்த பொதுப் பேச்சாளராகவும் இருக்கிறார். மிக முக்கியமாக அவருக்கு ஈகோவே கிடையாது!” என்று தனது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்!