“டி20 உலக கோப்பைக்கு என்னை செலக்ட் பண்ணா.. முதல்ல இத பண்ணுங்க!” – பிசிசிஐ-க்கு ரோகித் சர்மா கண்டிஷன்!

0
2690
Rohit

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்று இருந்தால், தற்போது அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை யார் கேப்டனாக வழிநடத்துவார்கள்? என்கின்ற கேள்வியே இருந்திருக்காது.

ஆனால் தற்பொழுது டி20 உலகக் கோப்பைக்கு நடுவில் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இந்திய டி20 அணி அமைப்பை சுற்றி நிறைய குழப்பங்கள் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக அணியை அமைப்பதில் இப்படியான குழப்பங்கள்தான் இருந்தது.

- Advertisement -

டி20 இந்திய அணியை அமைப்பதில் ஒரு பக்கம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை அணிக்குள் கொண்டு வர விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில் ரோகித் சர்மா பொதுவாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை, அவர் தொடர்ந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்த விரும்புவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து முடிவு செய்ய இந்தியத் தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் ரோகித் சர்மா தொடர்ந்து வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு குறிப்பாக டி20 உலக கோப்பை கேப்டனாக இருக்க வேண்டுமா? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த கூட்டத்தில் ரோகித் சர்மாவும் தன்னுடைய கருத்தை
கூறியிருப்பதாக கலந்து கொண்ட ஒரு அதிகாரி கூறியிருக்கிறார். ரோகித் சர்மா அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் “என்னை டி20 உலகக் கோப்பை கேப்டனாக தேர்வு செய்வதாக இருந்தால், அதை இப்பொழுதே சொல்லி விடுங்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்பொழுது வெளியாகி இருக்கும் இந்தத் தகவல் மூலமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம்தான் அடுத்த டி20 இந்திய கேப்டன் யார் என்பதில் குழப்பமாக இருக்கிறது என்பது தெரிகிறது. அதாவது மூத்த வீரர்களை டி20 அணிக்குள் கொண்டு வர யோசிக்கிறது.

ஒருவேளை மூத்த வீரர்கள் இல்லாமல் அணி அமையும் என்றால், ஹர்திக் பாண்டியா வந்தால் அவர் கேப்டனாக தொடர்வார். இல்லையென்றால் சூரியகுமார் யாதவே கேப்டனாக உலக கோப்பையில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.