“தயவு செய்து விராட் கோலிய விட்ருங்க.. ஏற்கனவே நடந்த வரைக்கும் போதும்” – இந்திய முன்னாள் வீரர் எச்சரிக்கை!

0
236

2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த மிகப்பெரிய உலகக் கோப்பை போட்டியின் முன்னோட்டமாக இந்தியா ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது .

இதற்கான இந்திய அணி இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது . காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் போன்றோர் அணிக்கு திரும்பி இருக்கின்றனர் . எனினும் இந்திய அணியின் நான்காவது இடத்தில் விளையாடும் வீரருக்கான கேள்விக்குறியை கடந்த உலக கோப்பையில் இருந்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

- Advertisement -

2019 ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பிறகு நான்காவது இடத்தில் சிறையாசிரியர் சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய நிலையில் அந்த இடத்தில் பல வீரர்களை சோதித்துப் பார்த்தும் இந்தியா அணிக்கு சரியான முடிவு கிடைக்கவில்லை. தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளில் அவர் எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்து உலகக் கோப்பை அணி அமையும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி போன்றோர் விராட் கோலியை நான்காம் இடத்தில் இந்தியா விளையாட வைக்கலாம் என பரிந்துரை செய்தனர் . விராட் கோலி இதற்கு முன்பாக நான்காவது இடத்தில் விளையாடி இருக்கிறார் என்றும் அதனால் அவரது அனுபவமும் இந்திய அணிக்கு கைகொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து இந்திய முன்னால் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் ,கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசி இருக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர் ” 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை அன்றைய பயிற்சியாளர் ஆன கிரேக் சேப்பல் மற்றும் கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் நான்காவது இடத்தில் களம் இறக்கினார் . அந்த முடிவு இந்திய அணிக்கு பாதகமாகவே அமைந்தது . 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் தோல்வியை தழுவியதோடு முதல் சுற்றிலும் வெளியேறியது” என தெரிவித்தார்.

- Advertisement -

“கடந்த 30 வருடங்களில் இந்திய அணியின் மிக மோசமான உலகக்கோப்பை அது என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் ஒரு போட்டியில் ரன் எதுவும் எடுக்காமலும் மற்றொரு போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்ததும் குறிப்பிடத்தக்கது . அதனால் விராட் கோலியை நான்காவது இடத்தில் களம் இறக்குவது குறித்து இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அதன் மேலாண்மை குழு தீர ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் . அவரை நான்காவது இடத்தில் களம் இறக்குவதால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து தொடர்பாக பேசியிருக்கும் டோடா கணேஷ் ” உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய போட்டிகளில் ஒரு வீரர் எந்த இடத்தில் மிகச் சிறப்பாக விளையாடினாரோ அதே இடத்தில் அவரை களம் இறக்குவதே சிறந்தது . விராட் கோலியின் ஆகச்சிறந்த சாதனைகள் மற்றும் ரன்கள் மூன்றாவது இடத்தில் அவர் களமிறங்கும் போது தான் வந்திருக்கின்றன. அதனால் அவரை மூன்றாவது இடத்தில் இருந்து மாற்று இறக்க இந்திய நிர்வாகம் முடிவு செய்யக்கூடாது அது அணிக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்.