“NO.8 பேட்ஸ்மேன தயவு செஞ்சு மறந்துடுங்க.. அதுதான் உங்களுக்கு நல்லது!” – இந்திய முன்னாள் வீரர் அதிரடியான ஆலோசனை!

0
6520
ICT

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் போட்டியில் உலகக் கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்பு வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இன்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசி இருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆடுகளங்களுக்கு என்ன மாதிரியான வீரர்கள் தேவைப்படுகிறார்களோ அப்படித்தான் நாங்கள் செல்வோம் என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் ஒரே மாதிரியான பிளேயிங் லெவனை கொண்டு இந்தியா விளையாடாது என்பதை அவர் தெளிவாகவே கூறியிருந்தார். இதனால் தேவைக்கு தகுந்தபடி அணியில் ஒன்று இரண்டு மாற்றங்கள் இருக்கலாம் என்பது உறுதி.

இந்த நிலையில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இன்று இந்திய அணி எப்படியான பவுலிங் யூனிட் அமைக்கும் என்பது கேள்வியாக இருக்கிறது. தற்பொழுது எட்டாம் இடத்தில் பவுலிங் ஆல் ரவுண்டர்? தேவையா இல்லை பவுலர் தேவையா? என்கின்ற சூழல் நிலவுகிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஒட்டுமொத்த அணிகளும் ஒரே ஒரு இடத்திற்கு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது அஸ்வினுக்கு பதிலாக முகமது சமியை விளையாட முடிவது. முகமது சமி கடைசியாக இந்திய அணிக்கு உலக கோப்பையில் விளையாடிய பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தார். ஆப்கானிஸ்தான அணி தனது கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சுழற் பந்துவீச்சில் சுருண்டது.

எட்டாவது இடத்தில் பேட்ஸ்மேன் என்கின்ற விதத்தில் ரவிச்சந்திரன் ஆஸ்வின் குறித்து அவர்களுக்கு குழப்பமாக இருக்கும். நான் அந்த இடத்தில் சமியை விளையாட விருப்பம் தெரிவிப்பேன். மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள். எட்டாவது இடத்தில் பேட்டிங் என்பதை மறந்து விடுங்கள்.

இது எந்த விதமான வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. இது பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான ஆடுகளம். இந்திய அணியில் கேஎல்.ராகுல் மற்றும் விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ரோகித் சர்மாவும் நல்ல ஃபார்மில் வருகிறார். எனவே இவர்களே பெரும்பாலும் போதுமானவர்களாக இருப்பார்கள்!” என்று கூறியிருக்கிறார்!