“தயவுசெய்து இந்த ரெண்டு பேர் வேண்டவே வேண்டாம்.. இந்த ஒரு பிளேயர் போதும்” – இந்திய முன்னாள் வீரர் அழுத்தமான கோரிக்கை!

0
684
ICT

ஆசியக்கோப்பை ஒருநாள் தொடருக்கு 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணியில் இருந்தே உலகக் கோப்பைக்கு இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வேறு எந்த வீரர்கள் ஆவது உலகக்கோப்பைக்கு தேவைப்பட்டால் நிச்சயம் அவர்கள் உள்ளே வருவார்கள், யாருக்கும் கதவுகள் முழுதாக அடைக்கப்படவில்லை என்று அவர் கருத்தை கூறி இருந்தார்.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் சுழற்பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் இருக்கிறார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா என ஐந்து பேர் இருக்கிறார்கள்.

இதில் போட்டியை வெல்ல எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால், இந்திய அணியின் பௌலிங் யூனிட் எதிரணிக்கு அபாயமானதாக இருக்கும் என்கின்ற விவாதம் வெளியே போய்க்கொண்டு இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “முகமது சிராஜ் மிகவும் புத்திசாலி. அவர் இந்த வடிவத்தில் 24 போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது சராசரி 20.7, அவரது எக்கனாமி 4.78. ஆசியாவில் அவரது சராசரி 16.57 ஆகவும், எக்கனாமி ரேட் 4.51 ஒன்றாகவும் சிறப்பாக உள்ளது.

ஆசியாவுக்கு வெளியே அவருடைய பந்துவீச்சு செயல்பாட்டை விட ஆசியாவில் அவரது பந்துவீச்சு செயல்பாடு மிக அருமையாக இருக்கிறது. எனவே சிராஜிக்கு பதிலாக சர்துல் தாக்கூர் இல்லை பிரஷித் கிருஷ்ணா என்று பேசிக் கொண்டிருப்பவர்கள், நீங்கள் அவரது இடத்தில் வேறு யாரையும் விளையாட வைக்க முடியாது. நீங்கள் அவரை மட்டும்தான் விளையாட வைக்க வேண்டும்.

பும்ரா 72 போட்டிகளில் 24.3 சராசரியில், 4.63 எகானமியில் 121 விக்கட்டுகள் எடுத்துள்ளார். இவர் புத்திசாலி. ஒரு ஆட்டத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு விக்கெட். ஆசியாவிலும் அவரது சராசரி 23.9. அவரது எக்கனாமி 4.65. இப்படி சிறப்பாகவே இருக்கின்றன.

முகமது ஷமியின் ஒட்டுமொத்த எண்ணிக்கையும் சிறப்பாகவே இருக்கிறது. 90 ஆட்டங்களில் 25.9 சராசரியில், 162 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். கிட்டத்தட்ட இவர் இதில் பும்ராவை ஒத்து இருக்கிறார். ஆனால் இவர் ஒரு ஓவருக்கு தரும் ரன் விகிதம் 5.60 என்று இருக்கிறது.

ஆனால் முகமது ஷமியை ஆசியாவில் எடுத்துக் கொண்டால் 39 ஆட்டங்களில் 64 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அவரது சராசரி 30.3 ஆகவும், அவர் ஒரு ஓவருக்கு தரும் ரன்கள் 5.96 ஆகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள். இவரிடம் இது மட்டும்தான் கொஞ்சம் இடிக்கிறது. ஆனால் இந்தியாவிற்கான வேகப்பந்து வீச்சு தாக்குதல் என்றால் இவர்கள் மூன்று பேரும்தான்!” என்று கூறியிருக்கிறார்!