இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் தொடரான துலீப் டிராபி அடுத்த மாதம் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட சில நட்சத்திர இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
துலீப் டிராபி பொதுவாக ஆறு மண்டலங்களாக அணிகள் பிரிக்கப்பட்டு நடத்தப்படும். தற்பொழுது ஏ,பி,சி, டி என நான்கு அணிகள் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த நான்கு அணிகளுக்கும் சுப்மன் கில், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்போது இந்த நான்கு அணிகளிலும் இடம்பெறாத முக்கிய 11 வீரர்கள் இடம்பெறும் பிளேயிங் லெவனை பார்க்கலாம். இந்த பிளேயிங் லெவனின் டாப் ஆர்டரில் தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த வலதுகை பேட்ஸ்மேன் பிரித்வி ஷா மற்றும் அதிரடி இளம் இடதுகை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா ஆகியோர் வருவார்கள். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் இந்திய அணிக்கு அதிக ரன்கள் குவித்த புஜாரா மூன்றாவது இடத்தில் இருப்பார்.
இதற்கு அடுத்து மிடில் ஆர்டரில் முக்கியமான நான்காவது இடத்தில் அனுபவ வீரரான ரகானே இடம் பெறுகிறார். ஐந்தாவது இடத்தில் இடது கை பேட்ஸ்மேனாக ரிங்கு சிங் வருகிறார். ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுகிறார்.
இதற்கு அடுத்து ஏழாவது இடத்தில் ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர் மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடு இருக்கும் ஜெயந்த் யாதவ் இருக்கிறார். எட்டாவது இடத்தில் ஒரு மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக இங்கிலாந்தில் கலக்கிக் கொண்டிருக்கும் சாகல் வருகிறார்.
வேகப் பந்துவீச்சாளர்களாக இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சில் தனி சாதனைகளை படைத்திருக்கும் உமேஷ் யாதவ், 140 கிலோ மீட்டருக்கு மேல் சீராக வீசக்கூடிய நவ்தீப் ஷைனி மற்றும் ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளராக தமிழகத்தின் நடராஜன் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.
இதையும் படிங்க : இலங்கை முன்னாள் கேப்டன் இந்நாள் வீரருக்கு தடை.. உள்நாட்டு பயிற்சி போட்டியிலும் ஆட கூடாது .. காரணம் என்ன?
2024 துலீப் டிராபியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களின் ப்ளேயிங் லெவன்:
பிரித்வி ஷா, அபிஷேக் ஷர்மா, புஜாரா ரகானே, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜெயந்த் யாதவ், சாகல், உமேஷ் யாதவ் நவ்தீப் ஷைனி மற்றும் நடராஜன்.