விராட் கோலிக்கு எதிராக விளையாடுவதை விட அவர் உடன் சேர்ந்து விளையாடுவது சிறப்பானது; அவர் உற்சாகத்தை உங்களுக்கும் தொற்ற வைப்பார் – பாப் டு பிளிசிஸ்

0
203
Viratkohli

இன்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றிற்கான மிக முக்கிய போட்டியில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத இருக்கிறது!

இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றால் பிளே ஆப் வாய்ப்பில் தொடர்ந்து இருக்கும். இந்த போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோற்றால் ஹைதராபாத் அணி போலவே பிளே ஆப் வாய்ப்பை இழந்து விடும்!

- Advertisement -

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்து கிரிக்கெட் விளையாடியவரான முகமது சிராஜ் தனது முன்னாள் அணியான ஹைதராபாத்துக்கு எதிராக ஹைதராபாத்தில் இன்று பெங்களூர் அணிக்காக முக்கிய போட்டியில் விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிக்கு முன்பாக பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் விராட் கோலி குறித்து சில முக்கியமான அற்புதமான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது
“விராட் இடம் வியப்பது அவரது மிகப்பெரிய ஆர்வத்தைதான். நான் எப்பொழுதும் விராட்டுக்கு எதிராக விளையாடுவதை ரசித்திருக்கிறேன். 10 விக்கெட் விழுகிறது என்றால் பத்தாவது விக்கட்டுக்கும் அதை ஆர்வத்தோடு உற்சாகத்தோடு கொண்டாடுவார். எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம்.

- Advertisement -

அதேபோல் பதினோராவது வீரர் வந்து பேட்டிங் செய்தாலும் அவர் ஆக்ரோஷமாகவே இருப்பார். அவர் அவுட் ஆனாலும் உணர்ச்சி வசப்படுவார். கிரிக்கெட் விளையாட்டின் மீது அவருக்கு இருக்கும் மோகத்தை எண்ணி வியந்து இருக்கிறேன்.

இப்போது அவருடன் இணைந்து விளையாடுவதால் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், அவரை எதிர்த்து விளையாடுவதை விட அவருடன் சேர்ந்து விளையாடுவது மிகச் சிறப்பானது என்று.

நீங்கள் அவருக்கு எதிராக விளையாடும் பொழுது அவரது ஆர்வம் உங்களையும் தூண்டிவிடும். நான் அதற்கு மறுபக்கத்தில் இருந்தேன். நீங்கள் அவருடன் சேர்ந்து விளையாடினால் அது மிகப்பெரிய விஷயம். அவருடன் பேட்டிங் செய்வது அலாதியானது. அவருக்கு இருக்கும் எல்லாம் உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும். இது உங்களிடம் இருக்கும் முழு சிறந்ததையும் வெளியில் கொடுக்க வைக்க நினைக்கும்.

ஒரு கிரிக்கெட் வீரருக்கு பின்னால் இருக்கும் விஷயங்களை, அந்த நபரையும் அறிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. விராட் கோலி மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட மனிதர்.

மேலும் அவர் என்னைப்போல குடும்பம் சார்ந்த ஒரு மனிதர். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். நாங்கள் ஒரே மாதிரியானவர்கள். குறிப்பாக குடும்ப உந்துதல், ஆர்வம் மற்றும் பச்சை குத்திக் கொள்ளுதல் இப்படி!” என்று கூறியிருக்கிறார்!