“ரோகித் பையாவுடன் சேர்ந்து விளையாடுவதில் கற்று கொள்வது மட்டும் கிடையாது.. மேலும்..” – ரிங்கு சிங் பதிவு

0
245
Rinku

நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடிய விதம், தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் புதிய கலாச்சாரமான அதிரடியான அணுகுமுறையை காட்டியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 22 ரன்களில் முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டது. நேற்றைய போட்டியில் மொத்தம் ஏழு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணியில் இருந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த இரண்டு விக்கெட்டுகளை இழந்தால் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் லைன் அப்பில் வந்து விடுவார்கள் என்கின்ற நெருக்கடியான சூழ்நிலை இருந்தது.

இப்படியான நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் ரண்களை திரட்டுவதில் அதிரடியான அணுகுமுறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் புத்திசாலித்தனமாகவும் விளையாடினார்கள்.

இந்த ஜோடி படிப்படியாக விளையாடி 15 ஓவர்களில் இந்திய அணியை 109 ரன்களுக்கு கொண்டு வந்தது. மேற்கொண்டு இன்னும் ஒரு 60 ரன்கள் 5 ஓவர்களில் சேர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்த நேரத்தில் பேட்டிங்கில் சூறாவளியாய் திரும்பிய ரோஹித் சர்மா சதம் அடித்து அதற்கு மேல் தாண்டி 121 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். ரிங்கு சிங் கடைசி ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் சிக்ஸர் அடித்து மிரட்டினார்.

இந்த ஜோடி நேற்று கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள் குவித்தது. மேலும் நேற்றைய போட்டியில் இந்த ஜோடி 100 பந்துகளை சந்தித்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் எல்லா விக்கெட்டுக்கும் சேர்த்து மிக அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது பதிவானது.

நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின்னால் பேசியிருந்த ரோகித் சர்மா சிங் ஆட்டத்தை அணுகும் முறை குறித்து மிகவும் பாராட்டுப் புகழ்ந்து பேசி இருந்தார். குறிப்பாக அவருடைய நிதானம் மற்றும் அமைதியான அணுகுமுறை, அவருக்கான பேட்டிங் திட்டம் பற்றி மிகவும் புகழ்ந்திருந்தார்.

இந்த நிலையில் ரிங்கு சிங் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவது குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவில் ” ரோகித் பையா உடன் இணைந்து விளையாடும் ஒவ்வொரு முறையும் கற்றுக் கொள்வதற்கான மாஸ்டர் கிளாஸ் அது. மேலும் அவருடன் இணைந்து விளையாடுவது மிகுந்த வேடிக்கையாகவும், அற்புதமான பொழுதுபோக்காகவும் இருக்கும். தொடரட்டும் வெற்றியின் அதிர்வுகள் என்று கூறியிருக்கிறார்.