“அவரது கேப்டன்சியில் விளையாடுவது எரிச்சலான மற்றும் கடுப்பான ஒன்று” – தோனியின் கேப்டன்சி குறித்த ரகசியத்தை வெளிப்படுத்திய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

0
874

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளான மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின .

எல் கிளாசிகோ போட்டிகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‌7 விக்கெட்டுகள் மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்தது. மதுரை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே மற்றும் ருத்ராஜ் ஆகியோரின் மிகச் சிறப்பான ஆட்டத்தால் எளிதாக வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நேற்றே போட்டியில் நான்கு ஓவர்களை வீசி அரவிந்தராஜ 30 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகச் சிறந்த கேப்டனாக அறியப்பட்டவர். இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது வர்ணனையில் இருந்த ராபின் உத்தப்பா எம் எஸ் தோனியின் கேப்டன்ஷிப் குறித்தும் அவரது அணிக்கு எதிராக ஆடும் போது அந்த கேப்டன் பொறுப்பு எவ்வாறு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்திருக்கிறார் .

இதுகுறித்து பேசி இருக்கும் ராபின் உத்தப்பா ” தோனிக்கு எதிராக விளையாடும் போது ஒரு கேப்டனாக அவர் நம்மை மிகவும் எரிச்சலடையச் செய்வார் . மேலும் அவரது யூகங்களும் திட்ட நுணுக்கங்களும் மிகவும் அபாயகரமானது . ஒருமுறை சென்னை அணிக்கு எதிராக நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆடிக்கொண்டிருந்த போது பைன்லக்கில் பீல்டர் இல்லாமல் பந்து வீசச் செய்தார். அதனால் நான் ஆப் சைடில் தான் பந்து வரும் என நினைத்து டீ பாய்ண்டில் ஆட்டம் இழந்தேன். இதுபோன்று சில முடிவுகளின் மூலம் போட்டியில் தாக்கத்தை எப்போதும் ஏற்படுத்தக் கூடிய ஒரு கேப்டன் அவர் என்று கூறினார் உத்தப்பா.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய உத்தப்பா ” தோனி எதிரணியுடன் மைண்ட் கேம் விளையாடுவதில் மிகச் சிறந்தவர். அவர் பேட்ஸ்மன்களுக்கு மட்டுமல்லாமல் தனது அணியின் பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கித் தரும் ஒரு கேப்டன் . அந்த அளவிற்கு தனது கிரிக்கெட் திறமை மற்றும் அறிவின் மூலம் போட்டியை ஒவ்வொரு கட்டத்திலும் கணிக்க கூடியவர். அவர் கேப்டனாக இருக்கும் அணிக்கு எதிராக விளையாடுவது மிகவும் எரிச்சலான ஒன்று என்று கூறி முடித்தார் உத்தப்பா