டி20 உலகக் கோப்பை 2024

விராட் கோலி உடன் மோதுவது நெருப்புடன் மோதுவது போல – பாக்-கில் பிறந்த அமெரிக்க பவுலர் பேட்டி

இன்று இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் நியூயார்க் நாசா மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அணி வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து சிறப்பு பேட்டி அளித்திருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இணைந்து அமெரிக்காவும் நடத்துகிறது. இதன் காரணமாக அந்த அணிக்கு நேரடியாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அமெரிக்க அணி பல கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் இருந்து நிறைய வீரர்கள் இடம்பெற்று விளையாடுகிறார்கள். இந்தியாவில் உள்நாட்டில் விளையாடிய வீரர்கள் இந்திய அணிக்கு எதிராக தற்போது விளையாடுவதால் இந்த போட்டி உணர்வுபூர்வமானதாக அமைகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க கேப்டன் மோனன்க் படேல் கூறும் பொழுது ” நீங்கள் இந்த போட்டி குறித்து கனவு காண்கிறீர்கள். டாஸ் போடும் பொழுது திடீரென ரோகித் சர்மாவுடன் நீங்கள் உங்களை பார்க்கிறீர்கள். இது உண்மைக்கு மாறான ஒன்று. இது உயர் மட்ட அழுத்த போட்டியாக இருக்கும். இப்போது நாங்கள் அனைத்து அணிகளுக்கு எதிராக விளையாட விரும்பும் கிரிக்கெட் பிராண்டை விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய உள்நாட்டு போட்டியில் விளையாடியிருக்கும் அமெரிக்க வீரர் ஹர்மீத் சிங் கூறும் பொழுது “நான் ரோகித் சர்மாவை பார்த்து வளர்ந்தவன். அவர் என்னுடைய பள்ளியில் இருந்து வெளியில் வந்தவர். மேலும் நான் இந்திய அண்டர் 19 அணிக்கு விளையாடிய பொழுது சஞ்சு சாம்சன், குல்தீப் ஆகியோருடன் விளையாடி இருக்கிறேன். மேலும் அக்சர் பட்டேல் உடனும் விளையாடி இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : நியூயார்க் ஆடுகளம் கிரிக்கெட் வெறியர்களுக்கு ஓகே.. ஆனால் ரசிகர்களுக்கு ஒத்து வராது.. காரணம் கூறும் கிளாசன்

பாகிஸ்தானில் பிறந்தவரான அலி கான் கூறும்பொழுது “விராட் கோலி எப்பொழுதும் விருப்பமானவர்களில் ஒருவர். அவருக்கு எதிராக விளையாடுவது எப்பொழுதும் சிறப்பானதாக இருக்கும். அவர்ஆடுகளத்தில் மிகவும் உணர்ச்சி வசப்படுவார். நானும் அப்படிப்பட்டவன் தான். எனவே அவருடன் மோதுவது நெருப்புடன் மோதுவது போன்று இருக்கும். இதனால்தான் அவர் கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts