ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட சதம் அடிக்காத 5 சீனியர் வீரர்கள்

0
274
Misbah-ul-Haq and Dinesh Karthik ODI

கிரிக்கெட் ஆரம்பித்த ஆரம்ப காலகட்டங்களில் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் இறுதிவரை நின்று சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதுவும் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலத்தில் ரன்கள் அடிப்பதே அவ்வளவு கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மற்ற வீரர்கள் அவ்வளவு எளிதாக நெருங்க முடியாத அளவுக்கு 49 சதங்கள் குவித்துள்ளார்.

தற்பொழுது பேட்டிங்குக்கு சாதகமாக விளையாட்டு போட்டிகள் அமைந்தாலும், அதிக அளவில் வீரர்கள் சதமடித்து வந்தாலும், அன்றைய போட்டியுடன் இன்றைய போட்டியை ஒப்பிடுவது சரியாக இருக்காது. இருப்பினும் இன்றைய காலகட்டத்தில் விராட் கோலி மிக அற்புதமாக விளையாடி சதங்களை குவித்து வருகிறார். ஒருவேளை சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தாலும் இரண்டையும் அவ்வளவு எளிதில் ஒப்பிட்டு ஒன்றென கூறிவிட முடியாது.

தற்பொழுது பல ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒரு முறை கூட சதம் அடிக்க முடியாமல் போன சீனியர் கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

மிஸ்பா உல் ஹக்

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் இவரும் ஒருவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 162 போட்டிகளில் விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் இவர் மொத்தமாக 42 அரைசதங்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் ஆவரேஜ் 43.40 ஆகும்.

ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 96 ஆகும். 2013ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து அடித்தார். இவர் பாகிஸ்தான் அணிக்காக நிறைய போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்கேல் வாகன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக மிக அற்புதமாக விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர். இவர் விளையாடிய பொழுது இங்கிலாந்து அணியை தலைமை தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது. இவர் இங்கிலாந்து அணிக்காக 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1982 ரன்களை குவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 28 ஆகும். ஒருநாள் போட்டிகளில் 16 அரைசதங்கள் குறித்து இருந்தாலும் இவரால் இறுதிவரை ஒரு சதம் கூட குவிக்க முடியாமல் போனது. இவரது அதிகபட்ச ஸ்கோர் 90 ஆகும். 2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இவர் அந்த ஸ்கோரை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரஹாம் தார்பெ

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆரம்ப காலகட்டங்களில் இவர் மிக அற்புதமாக விளையாடியவர். குறிப்பாக இவர் விளையாடி அனைத்து போட்டிகளிலும் இவருக்கு டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. அதன் காரணமாகவே இவரால் அதிக ரன்கள் குவிக்க முடியாமல் போனது.

இருப்பினும் மொத்தமாக 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2380 ரன்களை இதுவரை அவர் குவித்துள்ளார். இவரது பேட்டிங் அவரேஜ் 38 ஆகும். மேலும் 21 அரை சதங்களை இவர் குவித்துள்ளார்.

டுவெய்ன் ஸ்மித்

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்கள் இவரும் ஒருவர். இவரை மெதுவாக அணைத்து விட்டு விட்டு இரண்டு தொடர்களிலும் நாம் பார்த்திருப்போம். அதிரடியாக விளையாடக்கூடிய இவரால் ஒருமுறை கூட ஒருநாள் போட்டியில் சதம் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டுவெய்ன் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவு அற்புதமாக விளையாட காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக வழங்கப் படவில்லை. அதன் காரணமாக மார்ச் மாதம் 2017 ஆம் ஆண்டு அவர் தனது ஓய்வை அறிவித்து விட்டார். இருப்பினும் தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் 100 போட்டிகளில் விளையாடி 1560 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் அவரேஜ் 18.57 ஆகும். ஒருநாள் போட்டிகளில் இவர் இந்தியாவுக்கு எதிராக டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து அடித்த 97 தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

தினேஷ் கார்த்திக்

இவரது பெயரை படித்தவுடன் கண்டிப்பாக நீங்கள் ஆச்சரியப்பட்டு இருந்திருப்பீர்கள். இவருடைய போதாத காலம் மகேந்திர சிங் தோனி விளையாடிய காலத்தில் இவரும் விளையாடியது தான். அதன் காரணமாகவே இவருக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காமல் போனது.

இருப்பினும் இதுவரை 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1752 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவர் மொத்தமாக ஒன்பது அரை சதங்களை குவித்துள்ளார். மேலும் இவரது பேட்டிங்அவரேஜ் 30.20 ஆகும்.