2023-ல் ஓய்வு அறிவிப்பு.. இருந்தும் 2024-ல் திரும்ப வர வாய்ப்புள்ள 3 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்

0
4173

இம்ரான் கான், கார்ல் ஹூப்பர், கெவின் பீட்டர்சன், பிரெண்டன் டெய்லர், ஜவகல் ஸ்ரீநாத், மற்றும் ஷாஹித் அப்ரிடி, போன்ற வீரர்கள் ஓய்வு அறிவித்த பிறகு, மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு, தங்களது முடிவை திரும்பப் பெற்று விளையாடியவர்களில் முக்கியமானவர்கள்.

பெரும்பாலும் இதைப் போன்ற அதிகம் நிகழ்வது இல்லை. டி20 வளர்ச்சிக்கு பிறகு, சமீப காலங்களில் ஓய்வு பெறும் வீரர்கள், பிற நாடுகளில் நடைபெறும் டி20, டி10, மற்றும் ஹண்ட்ரட்(100) போன்ற தொடர்களில் விளையாடவும், பயிற்சியாளராகவும் தங்களது கவனத்தை செலுத்துகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதன் மூலம் கிடைக்கப்படும் வருமானம்.

- Advertisement -

டெஸ்ட் போட்டியில் மட்டும் ஓய்வு பெற்றிருந்த மொயீன் அலி, 2023இல் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது, டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைப்பை ஏற்று, தனது ஓய்வு முடிவிலிருந்து பின்வாங்கி ஆஷஸ் தொடரில் மட்டும் மீண்டும் விளையாடினார். 2024ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் இங்கிலாந்து அணி, ஜனவரி இறுதியில் டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது. இந்த அணியில் மொயீன் அலி தொடர்ந்து விளையாட வேண்டும் என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அந்த அணியின் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கேட்டுக்கொண்டனர், ஆனால் அதை மொயீன் அலி நிராகரித்து விட்டார்.

இதேபோல ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் போது, இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ஜோஸ் பட்லர் விரும்பியதால், டெஸ்ட் போட்டியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ஒருநாள் போட்டிக்கு மட்டும் ஓய்வு அறிவித்திருந்த பென் ஸ்டோக்ஸ், அவரது முடிவை திரும்பப்பெற்று 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற, ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார்.

இதைப்போல 2023ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற, சில வீரர்கள் மீண்டும் மீண்டும் 2024-ல் திரும்ப விளையாட வர வாய்ப்புள்ள மூன்று வீரர்களை பற்றி பார்க்கலாம்.

- Advertisement -

குயின்டன் டிகாக்: இதில் முதன்மையாக இருப்பது சவுத் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டிகாக். இவர் 2021இல் டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றிருந்த போதும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடருடன், ஒருநாள் போட்டியில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒருநாள் உலகக் கோப்பை தொடரில், நான்கு சதத்துடன் 594 ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் குயின்டன் டி காக். இந்தநிலையில் சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு, தங்களது அணியில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒருநாள் மட்டும் டி20 அணிக்கு, ஐடன் மார்க்ராம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஃபோர்ட், குயின்டன் டிகாக்யிடம், ஓய்வு முடிவில் இருந்து திரும்ப வருவது குறித்து பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேவிட் வில்லி: ஓய்வு முடிவை திரும்ப பெற, அதிக வாய்ப்புள்ள வீராக பார்க்கப்படுவது, இங்கிலாந்து அணியும் வேக பந்துவீச்சாளர் டேவிட் வில்லி. 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெற்றார் டேவிட் வில்லி. இவருக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படாததும், மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் இவரை இணைக்காததும், முக்கிய காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது. இந்த நிலையில் ஜோஸ் பட்லர் தலைமையின் கீழ் ஒருநாள் உலகக் கோப்பை, மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மட்டும் டி20 தொடரை இழந்துள்ளது. அதற்கு முக்கிய காரணியாக பார்க்கப்படுவது இளம் வேகபந்துவீச்சாளர்களுக்கு போதிய அனுபவமின்மையே மற்றும் காயங்கள். 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால், இவரது அனுபவம் இங்கிலாந்து அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. இவரை டி20 போட்டியில் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன்-உல்-ஹக்: மூன்றாவது முக்கிய வீரர் ஆப்கானிஸ்தான் அணியின் வேக பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக். இவரும் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடருடன், ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். வெளிநாடுகளில் நடைபெறும் டி20, டி10, மற்றும் ஹண்டர்ட் தொடர்களில் அதிக கவனம் செலுத்துவதற்காகவே, இவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதப்பட்டது. தற்போது நவீன் உல் ஹக் அந்நாட்டின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் அவர் மீது தடை விதித்தது. இதன் காரணமாக அவர் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவீன்-உல்-ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டவுடன் சமாதானமாக செல்லலாம் என முடிவு எடுத்திருப்பதாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவரை ஒருநாள் போட்டிக்கு மீண்டும் அழைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.