ஐபிஎல் 2023ல் பர்பிள் கேப்பை வெல்லக்கூடிய வீரர்கள் விமர்சகர்கள் கணிப்பு!

0
156

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து பிரம்மாண்டமாக துவங்க இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த வருடம் ஐபிஎல் தொடர்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மார்ச் மாதம் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டு மாத காலங்களும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா தான். இந்த வருட ஐபிஎல் தொடர்களில் இம்பேக்ட் பிளேயர் மற்றும் டீடைல் டிஆர்எஸ் ஆகிய புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதுவும் ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கும். பேட்ஸ்மேன்களின் ஆட்டமாகவே பார்க்கப்படும் டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களும் அவ்வப்போது தங்களது மாயாஜாலங்களை காட்டி வந்திருக்கின்றனர். ஐபிஎல் போட்டி தொடர்களிலும் அதிக விக்கெட் களை வீழ்த்தும் வீரருக்கு பர்பிள் கேப் என்ற விருது வழங்கப்படும்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிக்கப்பட்டபோது முதல் பர்பில் கேப் விருதினை பாகிஸ்தான் அணியின் சுஹைல் தன்வீர் கைப்பற்றினார். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது 27 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த யுசேந்திர சகாலுக்கு பர்பிள் கேப் வருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டிகளின் போது பர்பிள் கேப் வெளில போகும் வீரர்கள் யார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தனித்து வருகின்றனர். அந்த கணிப்பின் அடிப்படையில் மூன்று வீரர்கள் இந்த 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தலாம். அவர்கள் யார் என பார்ப்போம்.

ரஷித் கான்:
24 வயதிலேயே உலகின் சிறந்த டி20 கிரிக்கெட்டராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான். இவர் கடந்த ஆண்டு முதல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் அந்த அணியின் துணை கேப்டனாகவும் பதவி வகிப்பவர் . டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 528 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார் ரஷீத் கான். கடந்த ஆறு சீசங்களாக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் இவர் ஒவ்வொரு சீசனுக்கும் குறைந்தது 12 விக்கெட் கிளையாவது எடுத்து விடுவார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பவுலிங் செய்வதில் நல்ல ஃபார்மில் இருக்கும் ரஷித் கான் இந்த வருட போட்டியில் நிச்சயமாக அதிக விக்கெடகளை வீழ்த்தி பர்பிள் கேப் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜோப்ரா ஆர்ச்சர்:
இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஆன ஆர்ச்சர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இதற்கு முந்தைய சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 35 போட்டிகளில் ஆடி இருக்கிறார் ஆர்ச்சர். இந்தப் போட்டிகளில் 46 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஆடாமல் இருந்து சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்க இருக்கிறார். நிச்சயமாக தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் வெல்ல இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருக்கின்றனர்.

- Advertisement -

உம்ரான் மாலிக்:
இந்திய அணியின் அதிவேக இளம் பந்துவீச்சாளரான உம்ரன் மாலிக் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளின் போது 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட இவர் அந்தப் போட்டிகளிலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாகவே பயன்படுத்தினார் . தற்போது மீண்டும் ஐபிஎல்க்கு திரும்பி வந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் கைப்பற்ற போகும்
பிறர் இவர் தான் என பல முன்னாள் கிரிக்கெட் விமர்சகர்களும் கணித்து வருகின்றனர்.