யஷஷ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மாதிரி பசங்க பட்டையகிளப்புறானுங்க.. அதுக்கு காரணம் பிசிசிஐ பண்றதை யூஸ் பண்ணிக்கிறானுங்க – ரவி சாஸ்திரி பேட்டி!

0
346

திலக் வர்மா யஷஷ்வி ஜெய்ஸ்வால் போன்றோர் உள்ளூர் போட்டிகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டு விளையாடுகிறார்கள். அதனால்தான் இங்கு நன்றாக விளையாடுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் அசாத்தியமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

இவர் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதோடு 428 ரன்கள் குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 150க்கும் மேல் இருக்கிறது. மேலும் இவரது சராசரி கிட்டத்தட்ட 50 ஆகும். இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்டும் வருகிறார்.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் திலக் வர்மா ஒன்பது போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் உட்பட 240 ரன்கள் குவித்துள்ளார். மும்பை அணிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவரும் மும்பை அணியின் எதிர்காலமாக பார்க்கப்பட்டு வருகிறார்.

யஷஷ்வி ஜெய்ஸ்வால் இப்போது 21 வயது ஆகிறது. திலக் வர்மாவிற்கு 20 வயது ஆகிறது இவர்கள் இருவரும் விரைவில் இந்தியாவிற்கு விளையாடுவார்கள். நிறைய சாதனைகளை படைப்பார்கள் என்று கருதப்பட்டுவரும் நிலையில், இவர்கள் இருவரும் நன்றாக செயல்படுவதற்கு காரணம் என்னவென்று கருத்து தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி.

- Advertisement -

“அவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் காரணமாக ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் ரன்களை குவிக்க முடிகிறது. பலவீரர்கள் இங்கே உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். நேரடியாக ஐபிஎல் போன்ற போட்டிகளுக்கு வந்து தங்களது திறமையை காட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஒருபோதும் அப்படி எடுபடாது. உள்ளூர் போட்டியில் நன்றாக பயன்படுத்திக்கொண்டவர்களே ஐபிஎல் போன்ற பெரிய தளத்தில் இன்னும் அபாரமாக செயல்பட்டுள்ளர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்துள்ளார்கள். இந்த இரு இளம் வீரர்களும் உள்ளூர் போட்டிகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டு வந்திருப்பதால் செயல்பட முடிகிறது. சர்வதேச போட்டிகளிலும் சாதிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிகிறது.” என்றார்.