சூர்யா என்கிட்ட எறிந்ததுக்கு ரொம்ப நன்றி.. 2 ரன் 2 விக்கெட் இப்படி தான் பிளான் பண்ணேன்.. வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி பேட்டி

0
11540

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி பரபரப்பாக டிராவில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற வாஷிங்டன் சுந்தர் சில முக்கியக் கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மோசமான வானிலை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் துணை கேப்டன் கில் 39 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் ரியான் பராக் 26 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும் குவித்தனர். இலங்கை அணி தரப்பில் தீக்ஸனா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது. 110 ரன்கள் வரை இரண்டு விக்கெட்டுகளை இழந்து நல்ல நிலையில் இருந்த இலங்கை அணி மேற்கொண்டு 30 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்த ஆறு விக்கெட்டுகள் இழந்து 20 ஓவர்களில் 137 ரன்கள் குவித்து போட்டி சமனில் முடிந்தது. அதற்குப் பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் ஒரு இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்க இந்தியா நான்கு ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற வாசிங்டன் சுந்தர் கூறும் போது “நான் செய்த அனைத்து வேலைகளுக்கும் கடவுளின் ஆசிர்வாதம் எனக்கு உதவியது. நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்து அமைதியாக இருக்க விரும்பினேன். சூப்பர் ஓவரில் பந்து வீச பந்தை என்னிடத்தில் எறிந்ததற்கு சூரியகுமார் யாதவுக்கு மிகவும் நன்றி. இந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு நிஜமாகவே மகிழ்ச்சியாக உள்ளது.

- Advertisement -

நான் செய்ய வேண்டிய வேலையை சிறப்பாக செய்ய வேண்டும். இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நாங்கள் சில திட்டங்களை தீட்டினோம். நான் சரியான லைன் அண்ட் லென்த்தில் அவர்களுக்கு எதிராக பந்து வீசுவது முக்கியமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். சூப்பர் ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 2விக்கெட் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் 25 ரன்களும் பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளும் மற்றும் சூப்பர் ஓவரில் 2 விக்கெட்டும் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க:இப்ப சாக்குப்போக்கு சொல்ல மாட்டேன்.. எங்க தோல்விக்கு இந்த மோசமான விஷயம்தான் காரணம் – அசலங்கா பேட்டி

இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்ததாக ரோகித் தலைமையிலான இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.