இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கையணி முழுமையாக இழந்திருக்கிறது. இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் வெல்வதற்கான வாய்ப்பில் இருந்து இலங்கை அணி மோசமான முறையில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இலங்கை கேப்டன் சரித் அசலங்கா கூறியிருக்கிறார்.
இன்றைய போட்டியிலும் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சுக்கு இருந்த சாதகத்தை பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை 137 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். இந்திய அணிக்கு கில் 37 பத்தில் 39 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தீக்சனா மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு முதல் விக்கட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சிறப்பான பார்ட்னர்ஷிப் வந்தது. மேலும் பதினைந்து ஓவரில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 108 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு வெற்றிக்கு 9 விக்கெட் கைவசம் இருக்க பந்துக்கு பந்து என 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த இடத்தில் எடுத்து மேற்கொண்டு ஏழு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே இலங்கை அணி எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரிலும் சொதப்பி இரண்டு ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்விக்கு பிறகு பேசிய இலங்கை கேப்டன் சரித் அசலங்கா கூறும்பொழுது “நிச்சயமாக உண்மையில் மிக ஏமாற்றமாக இருக்கிறது. குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது. எங்களுடைய ஷாட் செலக்சன் மிகவும் மோசமாக இருந்தது. சுழல் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுகின்ற காரணத்தினால் ஹசரங்காவை முன்கூட்டியே இறக்கினோம். அவர் ஒரு இரண்டு பவுண்டரிகள் எடுத்துக் கொடுப்பார் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : என்னோட கடைசி ஓவரை விட பெஸ்ட் அதுதான்.. நான் பசங்க கிட்ட இதைத்தான் சொன்னேன் – சூரியகுமார் யாதவ் பேச்சு
குறிப்பாக நாங்கள் சில தவறான ஷாட்களை விளையாடினோம். பந்து பழையதான பிறகு ஷார்ட் செலக்சன் சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த தோல்விக்கு நாம் சாக்குப் போக்கு சொல்ல முடியாது. தொழில்முறை வீரர்களாக சரியான முறையில் சிறப்பாக விளையாடியாக வேண்டும். அடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் சிறப்பாக வருவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






