உலக கோப்பையில் இந்த வீரர் வேண்டாம்.. இவருக்கு வாய்ப்பு கொடுங்க.. இல்லனா கஷ்டம் – பியூஸ் சாவ்லா வெளிப்படையான பேச்சு!

0
4028
Piyush

இந்திய அணி சொந்த நாட்டில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு மிகச் சிறப்பான முறையில் தயாராகி இருக்கிறது என்று கூறலாம்.

ஆசியக் கோப்பைக்கு செல்வதற்கு முன்னால் இந்திய அணி முன்னணி வீரர்களின் காயத்தால் சிதறிக் கிடந்தது. யார் யார் எந்தெந்த இடத்தில் விளையாடுவார்கள் என்கின்ற பதில்கள் இந்திய அணி நிர்வாகத்திடம் அப்போது இல்லை.

- Advertisement -

ஆனால் ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பித்ததும் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான செயல்பாட்டை வெளிக்காட்டியது. முக்கியமான வீரர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால், இந்திய அணி எவ்வளவு அபாயகரமானது என்று தெரிந்தது.

முக்கிய வீரர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அணியாக விளையாடிய போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை இந்திய அணி வீழ்த்திய விதம், இந்திய அணி தற்போது என்ன மாதிரியான நிலையில் இருக்கிறது என்பதை காட்டியது.

தற்பொழுது இந்திய அணிக்கு உலகக் கோப்பையில் சிக்கல் என்று பெரும்பாலும் ஏதும் கிடையாது. யாரை விளையாட வைப்பது என்பது மட்டும்தான் பிரச்சனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த வகையில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் எட்டாவது இடத்தில் அஸ்வினா? அக்சரா?, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றால் சர்துல் தாக்கூரா இல்லை முகமது சமியா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

சர்துல் தாக்கூர் விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுக்கக்கூடிய பந்துவீச்சாளராக இருந்தாலும், அவர் ரன்களை நிறைய விட்டுத் தந்து விடுகிறார். மேலும் அவர் பெரிய அணிகளுக்கு எதிராக நிறைய விக்கெட் வீழ்த்தியவராக இல்லை. அதே சமயத்தில் முகமது சமி கடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா கூறும்பொழுது “சர்துல் தாக்கூர் பேட்டிங் பற்றி பேசுகிறார்கள், யாராவது வந்து 20, 30 ரன்கள் அதிரடியாக அந்த இடத்தில் விளையாட முடியும்.அங்கு ஒரு பந்துக்கு ஒரு ரன் என்று விளையாடுவது கூட பெரிய விஷயமாகத்தான் இருக்கும்.

மேலும் நீங்கள் அவரது பந்துவீச்சை பற்றி பேசினால் அவர் விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒரு ஓவருக்கு அவர் ரன் தரும் விதம் எப்பொழுதும் அதிகமாகவே இருந்திருக்கிறது.

உலகக் கோப்பையில் இந்தியா விளையாடப் போகும் நிலைமையை பார்த்தால், ஆடுகளங்கள் பெரும்பாலும் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருக்கும். எனவே இங்கே உங்களுக்கு ஒரு சரியான பந்துவீச்சாளர் தேவை. அவர் மணிக்கு 135 முதல் 140 கிலோ மீட்டர் வீசவேண்டும். அதற்கு சமிதான் சரியானவர்!” என்று கூறி இருக்கிறார்!