மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என இரு அணிகளிலும் விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்

0
660
Yuzvendra Chahal MI and RCB

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் வெற்றிகரமான அணி என்று பார்த்தால் அது மும்பை அணி தான். இதுவரை மொத்தமாக ஐந்து முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றி அணியாக மும்பை அணி திகழ்கிறது. மறுபக்கம் பெங்களூரு அணி மிக சிறப்பாக விளையாடினாலும் அதனால் ஒரு முறை கூட ஐபிஎல் தொடரை கைப்பற்ற முடியவில்லை.

இந்த இரு அணிகளிலும் ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். தற்போது இந்த இரு அணிகளிலும் விளையாடிய ஒருசில கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. மனிஷ் பாண்டே

2008 ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை அணிக்காக மணிஷ் பாண்டே விளையாடி வந்தார். ஆனால் அதற்கு அடுத்த ஆண்டே பெங்களூரு அணி அவரை கைப்பற்றியது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மணிஷ் பாண்டே சதம் அடித்தது நம் அனைவருக்கும் தெரியும். மிக இளம் வீரராக அப்போது தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். தற்பொழுது மனிஷ் பாண்டே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

2. சஹால்

சஹால் மும்பை அணியில் விளையாடினார் என்று சொன்னால் யாரும் முதலில் நம்பிவிட மாட்டார்கள். ஆனால் அவர் 2011 ஆம் ஆண்டு மும்பை அணியில் விளையாடினார். 2011ஆம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை மொத்தமாக மூன்று ஆண்டுகள் அவர் மும்பை அணியில் பங்கெடுத்து இருந்தார். இருப்பினும் அவர் மும்பை அணியில் இடம் பெற்று அவ்வளவாக போட்டிகளில் விளையாடவில்லை.

- Advertisement -

அதன்பின்னரே 2014ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தேர்வு செய்யப்பட்டார். தற்பொழுது பெங்களூர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக அவர் திகழ்கிறார்.

3. ஜாகிர் கான்

ஜாகிர்கான் 2008ஆம் ஆண்டு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார். அதன் பின்னர் பெங்களூரு அணி நிர்வாகம் அவரை தனது அணியில் இருந்து நீக்கியது.

- Advertisement -

அதன் பின்னர் 2009 மற்றும் 2010 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். மீண்டும் அவர் 2011ம் ஆண்டு முதல் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவே விளையாடினார். தற்பொழுது அவர் மும்பை அணியில் கிரிக்கெட் ஆபரேஷன் இயக்குனராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. வினய் குமார்

இவர் 2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலும் அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடினார். பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி 64 போட்டிகளில் 72 விக்கெட்டுகளை இவர் இதுவரை கைப்பற்றியிருக்கிறார்.

ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மும்பை அணியில் இடம் பிடித்து விளையாடினார். இரண்டு முறை மும்பை அணி கோப்பையை கைப்பற்றிய பொழுது இவர் அந்த அணியில் பங்கு எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ராபின் உத்தப்பா

2008ஆம் ஆண்டு மும்பை அணியில் விளையாடினார். இருப்பினும் இவரை மும்பை அணி தனது அணியில் இருந்து நீக்கியது. அதன் பின்னர் 2009 முதல் 2010ஆம் ஆண்டுவரை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் உத்தப்பா மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்காக விளையாடியதை விட கொல்கத்தா அணிக்காக மிக சிறப்பாக விளையாடினார். 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை மொத்தமாக ஆறு ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக மிக சிறப்பாக விளையாடியனார் என்பது குறிப்பிடத்தக்கது.