“உங்கள் இந்திய ஐபிஎல் நண்பர்களை பார்க்காமல் ஆஸ்திரேலியா போல் விளையாடுங்கள்!” – ரவி சாஸ்திரி நேரடி தாக்குதல்!

0
254
Ravi

2023 ஆம் ஆண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது!

இந்த நிலையில் நாளை டெல்லி பெரோ ஷா கோட்லா மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் குறித்தும், அணி மாற்றங்கள் குறித்தும் பெரிதான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் கே எல் ராகுல் சூரியகுமார் யாதவ் வெளியேறி, கில் மற்றும் ஸ்ரேயாஸ் உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட் மற்றும் ஸ்டார்க் இருவரும் உள்ளே வர வாய்ப்புள்ளது. ஆனால் யாரை வெளியேற்றுவார்கள் என்பது கொஞ்சம் குழப்பமே!

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலியா அணியின் அணுகுமுறை பற்றி பேசும் பொழுது
” ஆஸ்திரேலியா தனது பாணியில் ஆக்ரோஷமாக டெல்லியில் விளையாட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் எந்தவித சவாலையும் தராமல் முதல் போட்டியில் அடங்கியதைப் பார்க்க எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டார்கள். ஆஸ்திரேலியா இறங்கி சண்டை செய்ய வேண்டும் இல்லையென்றால் தொடரை முழுமையாக இழக்கும் ஆபத்து உள்ளது” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுடைய இந்திய ஐபிஎல் நண்பர்களை இப்பொழுது விட்டுவிட்டு தங்களுடைய ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தி, பின்பு தங்கள் நட்பை தொடரலாம் என்று நான் கூறுகிறேன். ஆஸ்திரேலியா வீரர்கள் கண்ணாடிக்கு முன் நின்று நான் மோசமானவர்கள் இல்லை என்று கூறிக் கொள்ள வேண்டும் ” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் வாய்ப்பு பற்றி பேசிய அவர் “இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் இல்லை அச்சுறுத்த வேண்டும் என்றால் ஆஸ்திரேலிய அணி தனது ஏ பிளஸ் ஆட்டத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அதாவது நாங்கள் ஆஸ்திரேலியாவில் வெளிப்படுத்திய ஆட்டத்தைப் போல. இது ஒன்றும் முடியாதது கிடையாது. நாங்கள் அடிலைடில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன பிறகு, அங்கிருந்து கடுமையாக சண்டை செய்து நாங்கள் தொடரை வென்றோம். எனவே ஆஸ்திரேலியா தொடரை இங்கு வெல்வது என்பது சாத்தியமற்றது” கிடையாது என்று கூறியிருக்கிறார்!