“எங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள்!” – சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து அழைப்பு!

0
1760
Samson

இந்திய அணியின் விக்கெட்கீப்பர பேட்ஸ்மேன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சன் சமீபகாலமாக இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சிகர்கள் இடையே பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது .

சஞ்சு சாம்சன் சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஆனாலும் அவர் டி20 உலக கோப்பைகாண இந்திய அணியில் இடம் பெறவில்லை . அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்ற சஞ்சு சாம்சனுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது அதன் பிறகு இந்திய அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து ஆடி வருகிறது இந்த அணிலும் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இது ஏற்கனவே பெரும் சர்ச்சையையும் அதிருத்தியையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்பொழுது அயர்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு அவர்களது தேசிய அணியில் விளையாட அழைப்பு விடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

நீண்ட காலமாகவே இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்படும் சாம்சனுக்கு அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியில் விளையாட அவரைக் கேட்டுக் கொண்டுள்ளது . இது தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அவருக்கு அனுப்பியுள்ள செய்தியில் “சஞ்சு சாம்சனுக்கு அயர்லாந்து நாட்டின் குடியுரிமை வழங்கப்படுவதோடு அவர் எல்லா போட்டிகளிலும் ஆடுவார் என்றும் அவரே அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் இந்த அழைப்பை சாம்சன் அன்பாக மறுத்துள்ளார்,இந்தியா தான் எனது நாடு என்றும் தனது கிரிக்கெட்டை இந்தியாவுக்கு விளையாடுவது தனது லட்சியம் என்றும் கூறியுள்ள சாம்சன் தனக்கான வாய்ப்பு நிச்சயமாக இந்திய அணியில் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -