நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 39 பந்துகளில் சதம் அடித்து அசத்திய பிரியன்ஸ் ஆர்யா மகேந்திர சிங் தோனி மற்றும் ரிக்கி பாண்டிங் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பற்றி மிகவும் முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு கட்டத்தில் ஓவர்களில் 83 ரன்களுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி இருந்தது. அப்பொழுது தனி ஒரு வீரராக இருந்து பிரியன்ஸ் ஆர்யா 39 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
நல்ல வாய்ப்பை இழந்து விட்டேன்
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதியில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை ப் பிரியன்ஸ் ஆர்யா வென்றார். மேலும் அவருக்கு இந்த போட்டியில் பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தது ஸ்ட்ரைக் ரேட் என பல விருதுகள் கொடுக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் அவர் நிறைய பேட்டிகள் கொடுக்க வேண்டியும் இருந்தது.
இதுகுறித்து பிரியன்ஸ் ஆர்யா பேசும்பொழுது “தோனி சாருக்கு எதிராக விளையாடுவதை நான் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அந்த வாய்ப்பு வெகு சிலருக்கே கிடைக்கிறது. அவர் கீப்பராக இருந்தது எனக்கு பெரிய அழுத்தத்தை கொண்டு செய்தது. மேலும் அஸ்வின் போன்ற புகழ்பெற்ற பந்துவீச்சாளர் இருந்தார்கள். நான் தோனி சாரிடம் பேச விரும்பினேன். ஆனால் அவர் அதற்குள் கிளம்பி விட்டார். நான் நிறைய பேட்டிகள் கொடுக்க வேண்டி இருந்ததால் நான் தவற விட்டு விட்டேன்”
ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த வாக்குறுதி
“முதல் அதில் யார் வேண்டுமானாலும் அவுட் ஆவார்கள், அதேபோல நீ அடிப்பதற்கு முதல் பந்து இருந்தால் அடித்து விடு என்று ரிக்கி பாண்டிங் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். புல் ஷாட் அடிப்பதில் அவர் என்னுடன் எப்பொழுதும் வேலை செய்கிறார். ஆனால் அவர் என்னுடன் டெக்னிக்கல் துறையில் இன்னும் வேலை செய்யவில்லை. நாங்கள் மனநிலை குறித்து மட்டுமே அலசுகிறோம்”
இதையும் படிங்க : துரோகி பிராவோ.. பயிற்சி முகாமில் தோனி கொடுத்த பரபரப்பான பேச்சு.. பதில் கொடுத்த பிராவோ
“சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி ஸ்ரேயாஸ் ஐயர் எனக்கு கூறினார். மேலும் இந்த சீசனில் 14 போட்டிகளிலும் நான் விளையாடுவேன் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். நான் ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதல் பந்தில் ஆட்டம் இழந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் எதுவும் நெகடிவ் ஆக பேசவில்லை. இது எனக்கு நம்பிக்கையை அதிகரித்தது” என்று கூறியிருக்கிறார்.






