துரோகி பிராவோ.. பயிற்சி முகாமில் தோனி கொடுத்த பரபரப்பான பேச்சு.. பதில் கொடுத்த பிராவோ

0
411
Dhoni

இன்று சிஎஸ்கே அணி தங்களது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டிருந்தபொழுது கலகலப்பான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது கேகேஆர் அணி 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்றிருக்கிறது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று இருக்கிறது. இதில் ஒரு சுவாரசிய விஷயம் என்னவென்றால் இரண்டு அணிகளும் தங்களுக்கு ஹோம் அட்வாண்டேஜ் இல்லை என்று கூறக்கூடிய அணிகளாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

இரு அணியிலும் மாறிய காட்சிகள்

சிஎஸ்கே அணியின் அடையாள வீரர்களில் பிராவோ மிகவும் முக்கியமானவர். சிஎஸ்கே அணிக்காக விளையாடி வந்தவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றதும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு அதிரடியாக கேகேஆர் அணியின் மென்டராக மாறினார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இன்று நடைபெறும் போட்டிக்கு தோனி மீண்டும் கேப்டனாக வரவிருக்கிறார். தற்போது சிஎஸ்கே அணியின் திட்டமிடுதல்கள் சேப்பாக்கத்தில் எப்படி இருக்கும் என்று பிராவோவுக்கு எல்லாமே தெரியும். இது தொடர் தோல்வியில் இருந்து வரும் சிஎஸ்கே அணிக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

- Advertisement -

துரோகி என்று அழைத்த தோனி

இந்த நிலையில் இரு அணிகளும் போட்டிக்கு முன்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த பயிற்சியின்போது கேகேஆர் அணியின் மெண்டர் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் பிராவோ சிஎஸ்கே அணி வீரர்களை சந்திப்பதற்கு வந்தார். அவர் முதலில் ஜடேஜாவை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க : ரோகித் சர்மா ஐபிஎல் சரிவுக்கு.. கேஎல்.ராகுலே சாட்சி.. வெளியான ஆச்சரிய புள்ளிவிபரம்.. ஹர்திக் பாவம்

இதற்கடுத்து அவர் தோனியிடம் வந்த பொழுது தோனி “இதோ துரோகி இங்கே இருக்கிறார்” என பிராவோவை நகைச்சுவையாக குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பிராவோ கூறும்பொழுது வாழ்க்கை மிகவும் நியாயமற்றது என்றார். கேப்டனாக தோனியும் சிஎஸ்கே வீரராக பிராவோ சேர்ந்து எத்தனையோ போட்டிகளை கடைசி இடத்திலிருந்து கூட எடுத்து வென்று இருக்கிறார்கள். இன்று இருவரும் எதிரெதிர் முகாமில் இருந்து சந்திப்பது வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது!

- Advertisement -