தனிநபர் சாதனை முக்கியம் தான்! ஆனால் அணி பெற்ற தோல்வியை மறக்கக்கூடாது!- சீனியர் வீரரை சீண்டிய முன்னாள் வீரர்!

0
277

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது . இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது .

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 45 வது சதத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் சிறப்பாக ஆடி 113 ரன்களை அந்த போட்டியில் எடுத்திருந்தார் . அதற்காக ஆட்டநாயகன் விருதும் பெற்றார் .

பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அந்த அணியுடன் ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது . அந்தத் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் சதத்தை பதிவு செய்தார் . அந்தப் போட்டியில் இசான் கிசான் 200 ரண்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரு நாள் போட்டியில் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்ததால் அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளுக்கான சதத்தினை கடந்து செல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் .

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இது போன்ற சாதனைகள் நல்ல விஷயங்கள் தான் என்றாலும் எப்போதும் அணியின் வெற்றியே ஒரு கிலோ விளையாட்டில் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார் .

இது குறித்து தொடர்ந்து பேசி உள்ள கம்பீர் இந்திய அணியின் பங்களாதேஷ் அணியுடன் தோல்வியை யாரும் மறக்க கூடாது என்று கூறியுள்ளார் . ஒரு தனி நபரின் சாதனைகள் பாராட்டுக்குரியது தான் என்றாலும் என்றுமே அணியின் வெற்றி தான் முக்கியம் . இந்திய அணி முழு பலத்துடன் வங்கதேசத்தை எதிர்கொண்டு அவர்களிடம் தொடரை இழந்ததை ஒரு போதும் மறக்க கூடாது என்று கூறினார் .

மேலும் தொடர்ந்து பேசுகையில் ஒரு வீரர் ஒரு சாதனையை புரிந்து உடன் நாம் அணியின் தோல்வியை மறந்து விடுகின்றோம். பங்களாதேஷ் தொடரில் இருந்து நிச்சயமாக ஒரு பெரிய பாடத்தை நாம் கற்று இருக்க வேண்டும் . அதை மறந்து விட்டு நாம் தனிப்பட்ட நபர்களின் சாதனைகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறி முடித்தார் .