இந்திய அணிக்குள் என்மீது இப்படியொரு முத்திரையை குத்திவிட்டார்கள் – வருத்தத்துடன் பகிர்ந்துகொண்ட அஸ்வின்!

0
3849

கிரிக்கெட்டில் நான் எனது வேலையை செய்தாலும் எனக்கு இப்படி ஒரு முத்திரையை குத்திவிட்டார்கள் என்று தனது சமீபத்திய பேட்டிகள் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார் ரவிச்சந்திரன் அஸ்வின்

நடந்து முடிந்த 2021-23ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப லீக் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், இந்திய வீரர்கள் மத்தியில் முதல் இடத்திலும் இருக்கிறார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை சென்ற இந்திய அணி, பிளேயிங் லெவனில் அஸ்வின் போன்ற நம்பர் ஒன் டெஸ்ட் வீரரை எடுக்கவில்லை என்கிற காரணத்திற்காக ரோஹித் சர்மா தற்போது வரை விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் எடுக்கப்படாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில்,

“நான் 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு மைதானங்களில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறேன். குறிப்பாக கடந்த முறை இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நானும் விளையாடினேன். இரண்டு இன்னிங்சில் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை எடுத்தேன்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சாளருடன் களம் இறங்கி 2-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை சமன் செய்தது. அதன் அடிப்படையில் அணியின் கேப்டன் இந்த முடிவு எடுத்திருக்கலாம்.

- Advertisement -

இறுதியில் கேப்டன் எடுப்பதுதான் முடிவு. அணிக்கும் அவரது திட்டதிற்கும் யார் சரியாக இருப்பார்கள்? என்பதை வைத்து எடுப்பார். ஆகையால் அதில் நான் எந்தவித தலையீடும் செய்ய முடியாது.” என்றார்.

மேலும் இந்திய அணியில் தன் மீது வைக்கப்படும் சில குற்றச்சாட்டுகள் மற்றும் குத்தப்படும் முத்திரைகள் குறித்து பேசி ரவிச்சந்திரன் அஸ்வின்,

“இந்திய அணியில் மட்டுமல்ல அது வெளியில் இருக்கும் பல பேர் எனக்கு நான் வித்தியாசமாக யோசித்து சற்று கொக்குமாக்காக செய்பவன் என்கிற முத்திரையை குத்தி விட்டார்கள். அணியில் சிலருக்கு 10-15 போட்டிகள் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். என்னை போன்ற சில பேர்களுக்கு ஒன்று இரண்டு போட்டிகள் கிடைக்கும். அதன் பிறகு வெளியில் அமர்த்தி விடுவார்கள்.

ஆரம்ப கட்டத்தில் இப்படி பல பிரச்சினைகளை நான் சந்தித்து இருக்கிறேன். அப்போது என்னென்ன வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதை யோசித்து தான் செய்ய முடியும். அதற்காக நான் என்னுடைய வேலையை செய்தேன்.

தொடர்ந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் என்ன செய்யலாம்? எதை செய்தால் அணியின் வெற்றிக்கு பங்களிப்பை கொடுக்கலாம்? பிட்ச் எப்படி இருக்கிறது? இங்கே பந்து எப்படி திரும்பும்? என்று பல விதமாக யோசித்த பிறகு கிரிக்கெட்டுக்குள் நான் வருவேன். இதுதான் என்னுடைய அணுகுமுறை. என்னுடைய வேலையை செய்வதற்காக இப்படி ஒரு முத்திரை என் மீது இருந்து வருகிறது.

நான் முன்பே சொன்னது போல, அணியின் பல முன்னணி கேப்டன்கள் வெளிநாடு தொடர்களுக்கு செல்லும் பொழுது என்னுடைய பெயர் முதலில் இல்லை என்கிறவாறு கூறியிருக்கிறார்கள். இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருக்கும், என்னால் எப்படி அணிக்குள் இடம்பெற முடியும் என்பதை பல விதமாக யோசித்துதான் செயல்பட முடியும். வெளியில் இருப்பவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்று சற்று வருத்தத்துடன் அஸ்வின் பகிர்ந்து கொண்டார்.