ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்காத சம்பவத்தில் போட்டி நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து திடீரென பாகிஸ்தான் பல்டி அடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் உதவி செய்ததாகவும், மேற்கொண்டு இதற்காக எந்த கண்டிப்பையும் தெரிவிக்கவில்லை என்று கூறி நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஐசிசி இடம் பாகிஸ்தான் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு அணி வீரர்கள் போட்டி முடிந்ததும் மற்ற அணி வீரர்களுடன் கை கொடுக்க வேண்டும் என்கின்ற கட்டாய விதி கிரிக்கெட் சட்டப் புத்தகத்தில் இல்லை. இதன் காரணமாக இந்திய அணியின் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஐசிசி தரப்பில் இருந்து கூறப்பட்டு இருப்பதாக செய்திகள் கூறுகிறது.
மேலும் இதன் காரணமாக அந்த போட்டியில் போட்டி நடுவராக இருந்தவர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிகிறது. மேலும் போட்டி நடுவர் சூரியகுமார் யாதவுக்கு எந்த விதமான உதவி செய்யவில்லை என்றும் தெரியவந்திருக்கிறது. இதை தனிப்பட்ட முறையில் சூரிய குமாரும் இந்திய அணி நிர்வாகமும் முடிவு செய்தது உறுதியாகி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிரிய கிரிக்கெட் கவுன்சில் சேர்மேன் மொஹ்சின் நக்வி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டி நடுவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தொடரை விட்டு நீக்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு கொஞ்சமாவது வெட்கம் இருக்கா?.. அம்பயர கரெக்ட் பண்ணி ஜெயிக்கறீங்க – முகமது யூசுப் விமர்சனம்
இந்த நிலையில் திடீரென அவர் அந்த பதிவை நீக்கி இருக்கிறார். ஏனென்றால் ஐசிசி இதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காது என்பது அவர்களுக்கு உறுதியாக தெரிந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு இந்த விஷயத்தில் அவமானப்படக்கூடாது என இந்த முடிவை எடுத்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.