இந்திய கிரிக்கெட் வாரியம் கள நடுவர்களையும் போட்டி நடுவர்களை தன் பக்கமாக வைத்துக்கொண்டு வெற்றி பெறுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்காதது தற்போது பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது. இது குறித்த விவாதத்தின் போது முகமது யூசுப் இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
எதையோ பேசிய யூசுப்
இந்த கை கொடுக்காத சம்பவம் பற்றி பாகிஸ்தானின் தொலைக்காட்சியில் முகமது யூசுப் பங்கேற்ற நிகழ்ச்சி என்பது கேள்வி முன் வைக்கப்பட்டது. ஆனால் அவரோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறை சொல்லும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பெயரை தவறாக உச்சரித்த அவரை பேட்டி எடுத்தவர் திருத்திக் கூறி இருக்கிறார். இருந்த போதும் அவர் மீண்டும் மீண்டும் இந்திய கேப்டனின் பெயரை தவறாகவே கூறியது நகைச்சுவையாக அமைந்திருக்கிறது.
நடுவர்களை வைத்து வெல்கிறார்கள்
பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் நெறியாளர் மற்றும் முகமது யூசுப் இருவரிடையே நடந்த உரையாடல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : வெளிப்படையா சொல்றேன்.. கில்லை இதுக்கு தான் கம்பீர் துணை கேப்டனா நியமிச்சாரு – மனோஜ் திவாரி பேட்டி
யூசுப் இந்தியா செய்து கொண்டிருக்கும் மோசமான காரியங்களில் இருந்து தப்பிக்க முடியாது. அவர்களுடைய கேப்டன் சுவார்குமார் யாதவ்…
ஆங்கர்: அது சூர்யகுமார் யாதவ்.
யூசுப்: ஆம், அதுதான் சொன்னேன் சுவார்குமார் யாதவ்.
ஆங்கர்: இல்லை, அவர் பெயர் சூர்யகுமார் யாதவ்.
யூசுப்: ஓ சரி! அவர் சுவார்குமார் யாதவ். இந்தியா போட்டிகளை வெல்லும்படி செய்யும் தந்திரங்களுக்காக வெட்கப்பட வேண்டும்: அம்பையரை வைத்துக்கொள்வது, ரெஃபரியைக் கட்டாயப்படுத்தி தங்களுக்கேற்ப செயல்படச் செய்வது – எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.






