கிறிஸ் கெயில் ரெக்கார்டை உடைத்தெறிந்த விராட் கோலி.. பஞ்சாப் அணிக்கெதிராக அரைசதம் அடித்து இந்த ரெக்கார்ட்!

0
277

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை படைத்திருக்கிறார் விராட் கோலி.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மொகாலியில் உள்ள மைதானத்தில் விளையாடுகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு துவக்க ஜோடிகள் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இம்முறை முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

மீண்டும் ஒருமுறை அரைசதம் அடித்த விராட் கோலி 59 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளசிஸ் 84 ரன்கள் விளாசினார். அடுத்து வந்தவர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது.

ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட் உட்பட அனைத்து டி20 லீக் போட்டிகளும் சேர்த்து விராட் கோலி அடிக்கும் 89ஆவது அரைசதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக 365 டி20 போட்டிகளில் விளையாடி இதனை செய்து காட்டியுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் “யுனிவர்சல் பாஸ்” என்று அழைக்கப்படும் கிரிஸ் கெயில் அடித்த 88 அரைசதங்களை முறியடித்து அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் 96 அரைசதங்களுடன் டேவிட் வார்னர் இருக்கிறார். இவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே 62 அரைசதங்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் ஆர்சிபி அணிக்காக 2008ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வரும் விராட் கோலி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் ஆர்சிபி அணிக்காக 50ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். 48 ஐபிஎல் அரைசதங்கள், இரண்டு சாம்பியன்ஸ் லீக் அரைசதங்கள் ஆகும். ஒரு அணிக்காக தனிநபர் அடித்த அதிகபட்ச அரைசதமாகவும் இது இருக்கிறது. வேறு எந்த வீரரும் ஒரு சர்வதேச அல்லது கிளப் அணிக்காக இவ்வளவு அரைசதங்கள் அடித்ததில்லை என்பது வரலாறு.