ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசித் தள்ளிய பால் ஸ்டெர்லிங் ; 46 பந்தில் அதிரடி சதம் – வீடியோ இணைப்பு

0
118

இங்கிலாந்தில் விட்டாலிட்டி டி20 பிளாஸ்ட் கடந்த 25ஆம் தேதி துவங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நார்த் குரூப் மற்றும் சவுத் குரூப் என 18 அணிகள் இரண்டு பிரிவாக பிரிந்து லீக் தொடர் போட்டிகளில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன.

நேற்று நார்த் குரூப் பிரிவில் வார்விக்ஷிரே மற்றும் நார்த்தாம்டன்ஷிரே அணிகள் விளையாடின. போட்டியில் டாஸ் வென்ற வார்விக்ஷிரே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 16 ஓவர்களுக்கு சுருக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் அந்த அணியின் ஓபனிங் வீரர் பவுல் ஸ்டெர்லிங் ஐம்பத்தி ஒரு பந்தில் சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் விளையாடிய நார்த்தாம்டன்ஷிரே அணி 14.2 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வார்விக்ஷிரே அணியில் சிறப்பாக பந்து வீசிய டேனி பிரிக்ஸ் மற்றும் ஜேக் லிண்டாட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

ஒரு ஓவரில் 34 ரன்கள் விளாசிய பவுல் ஸ்டெர்லிங்

வார்விக்ஷிரே வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஆட்டத்தின் 13வது அவரை எதிர் அணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் சேல்ஸ் வீசினார். அந்த ஓவர் முழுக்க வார்விக்ஷிரே அணி வீரர் பவுல் ஸ்டெர்லிங் எதிர் கொண்டார்.

- Advertisement -

அந்த 6 பந்துகளில் முதல் ஐந்து பந்து சிக்ஸர் மற்றும் ஆறாவது பந்து பவுண்டரி என அந்த ஓவர் முழுக்க பந்து பவுண்டரி லைனை தாண்டி பறந்து கொண்டே இருந்தது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் யுவராஜ் சிங் உலக கோப்பை தொடரில் 6 சிக்சர்கள் அடித்து நாம் பார்த்திருக்கிறோம். நேற்று கடைசி ஒரு பந்தில் சிக்ஸர் அடித்து ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பவுல் ஸ்டெர்லிங் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பவுண்டரி அடித்தார். 46 பந்துகளில் நேற்று அவர் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அந்த ஓவரில் மொத்தமாக 34 ரன்கள் அவரது அணிக்கு சேர்த்தார். அவர் அவ்வாறு ஆக்ரோஷமாக ஒரு ஓவரில் 5 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 34 ரன்கள் அடித்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் தற்பொழுது புள்ளி பட்டியலில் வார்விக்ஷிரே அணி 2 புள்ளிகளுடன் (+8.88 நெட் ரன் ரேட்டுடன்) முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.