பதிரானா vs நுவன் துசாரா.. அடுத்த மலிங்கா யார்? சிஎஸ்கேவா மும்பையா ?.. முழுமையான தகவல்கள்!

0
463
Pathirana

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் அடைந்து வெளியேற, கடந்த ஆண்டு அவருடைய இடத்தில் இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதிஷா பதிரனாஇடம்பெற்றார்.

மேலும் இவரே இந்த வருடத்திற்கு தொடர்ந்து தக்கவும் வைக்கப்பட்டார். இவருடைய ஸ்லிங் பவுலிங் ஆக்சன் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் இவரிடமிருந்து அதிவேகமான சில யார்க்கர்கள் விழுகிறது.

- Advertisement -

எனவே டி20 கிரிக்கெட்டில் இவர் தனித்துவம் பெற்ற பந்துவீச்சாளராக மாறுகிறார். இதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் குறிப்பாக மகேந்திர சிங் தோனியால் இந்த இளைஞர் அணியில் தக்க வைக்கப்பட்டார். மேலும் இவர் குட்டி மலிங்கா என்றும் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் இந்த வருட ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதே இலங்கையில் இருந்து ஸ்லிங் பவுலிங் ஆக்சன் கொண்ட நுவன் துஷாரா எனும் பந்துவீச்சாளரை 4.80 கோடிக்கு வாங்கியிருக்கிறது.

இவர்கள் இருவரும் இலங்கையில் இருந்து வந்திருப்பதால், மேலும் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அணிகளான சென்னை மற்றும் மும்பையில் இருப்பதால், இவர்கள் இருவரில் யார் மலிங்காவை ஜெராக்ஸ் எடுக்கக்கூடிய அளவில் திறமையாக இருக்கிறார்கள் என்கின்ற விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

மலிங்காவை பொறுத்தவரை அவருடைய பந்துவீச்சு துல்லியம் அருமையாக இருக்கும். அவரால் புதிய பந்தை நன்றாக ஸ்விங் செய்ய முடியும். அவரிடம் கண்ட்ரோல் நல்ல முறையில் இருக்கும். இதன் காரணமாக நினைத்த இடத்தில், நினைத்த மாதிரி பந்தை அவரால் வீச முடிந்தது. இதுதான் அவருடைய வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக, ஸ்லிங் பவுலிங் ஆக்சனில் அமைந்தது.

இதே பதிரனாவை எடுத்துக் கொள்ளும் பொழுது, அவருடைய பந்துவீச்சு துல்லியம் குறைவாக இருக்கிறது. நிறைய வைடு வீசுகிறார். மேலும் அவர் புதிய பந்தில் வீசுவதில்லை. ஏனென்றால் அவருக்கு ஸ்விங் இல்லை. மலிங்கா இடம் இல்லாத ஒன்று இவரிடம் இருப்பது வேகம் மட்டுமே.

அதே சமயத்தில் மும்பை வாங்கி இருக்கும் நுவன் துஷாராவை எடுத்துக் கொண்டால் அவருக்கு புதிய பந்தை ஸ்விங் செய்ய தெரிகிறது. மேலும் அவருக்கு மலிங்கா போல் கண்ட்ரோல் இருக்கிறது. இதனால் முடிந்தவரை பந்தை துல்லியமாக வீசுகிறார். அவருக்கு நிறைய எக்ஸ்ட்ராக்கள் வருவதில்லை.

இந்த வகையில் பார்க்கும் பொழுது மலிங்காவை ஜெராக்ஸ் எடுக்கக்கூடிய அளவில், கொஞ்சம் நெருக்கமாக நுவன் துஷாரா இருக்கிறார். பதிரனாவிடம் ஸ்விங் கிடைப்பது கடினம். ஆனால் அவர் தன்னுடைய பந்துவீச்சின் துல்லியத்தை அதிகரித்து, எக்ஸ்ட்ராக்களை குறைக்க வேண்டும். எப்படி எடுத்துக் கொண்டாலும் அடுத்த மலிங்கா என்கின்ற அளவில், நுவன் துஷாராவே அருகில் இருக்கிறார்!