லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக் : பதான் சகோதரர்கள் அதிரடியில் இந்தியா மகாராஜாஸ் அபார வெற்றி – வீடியோ இணைப்பு

0
4318
Yusuf Pathan and Irfan Pathan

தென் ஆப்பிரிக்காவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் தற்போது மோதி வருகின்றது. முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி ஏற்கனவே தோல்வி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரை வென்ற இந்திய அணி பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு பக்கம் ஒருநாள் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வந்தாலும் இந்திய ரசிகர்களின் கவனம் தற்போது இன்னொரு பக்கம் திரும்பியுள்ளது. ஓமன் நாட்டில் நடந்துவரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் தொடர் ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளது. சேவாக், யுவராஜ், ஹர்பஜன், அப்ரிடி, அக்தர், ஜெயசூர்யா, லீ, பீட்டர்சன் போன்ற முன்னணி ஓய்வு பெற்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதால் பல நாட்களுக்கு முன்பு இருந்தே இந்த தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று இந்த தொடர் ஆரம்பம் ஆனது.

- Advertisement -

முதல் போட்டியில் ஆசியா லயன்ஸ் மற்றும் இந்தியா மகாராஜாஸ் அணிகள் மோதின. சேவாக் யுவராஜ் போன்ற வீரர்கள் இன்னமும் ஓமன் நாட்டுக்கு போய் சேராததால் மற்ற வீரர்களை கொண்டு இந்திய அணி களமிறங்கியது. ஆசையா லயன்ஸ் அணியிலும் இதுபோல சில முக்கிய வீரர்கள் களம் இறங்காமல் இருந்தனர். முதலில் ஆசியா லயன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணிக்கு உபுல் தரங்கா சிறந்த துவக்கம் கொடுத்தார். மற்ற டாப் பார்டர் வீரர்கள் சரியாக விளையாடாவிட்டாலும் இவர் பொறுமையாக 66 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கொடுக்க அந்த அணி 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின்பு களமிறங்கிய இந்திய மகாராஜா அணிக்கு பின்னி மற்றும் நமன் ஓஜா ஆகியோர் துவக்கம் கொடுத்தனர். ஆனால் அவர்களை எளிதாக சமாளித்து ஆசிய லயன்ஸ் அணி விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தியது. 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது கேப்டன் கைப் மற்றும் யூசுஃப் பதான் ஜோடி சேர்ந்தனர். யூசுஃப் பதான் அதிரடியாக விளையாடி 80 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக ஆடிய கைப் 42 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் இர்பான் பதான் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக யூசுப் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆசிய லயன்ஸ் அணி வேர்ல்ட் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -