யாரும் செய்யாதது.. எங்க முதல் 4 பேட்ஸ்மேன்கள் பெரிய விஷயத்தை பண்ணியிருக்காங்க.. இந்த தோல்வி எங்களை பாதிக்காது – பேட் கம்மின்ஸ் பேச்சு

0
23
Cummins

நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 86 ரன்னில் சுருண்டு 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடியாக ஹைதராபாத் அணி 86 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

- Advertisement -

சிக்கலான புள்ளி பட்டியல்

தற்போது ஹைதராபாத் அணி 14 புள்ளிகள் எடுத்து இருந்தாலும் இன்னும் அவர்களுக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த இரண்டில் ஒரு போட்டியை அவர்கள் வெல்ல வேண்டும். ஒருவேளை இரண்டு போட்டியையும் தோற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது 99 சதவீதம் கடினம் ஆகிவிடும்.

இப்போது புள்ளி பட்டியலில் பஞ்சாப் 13 புள்ளிகள் உடன் இருக்க குஜராத், ஆர்சிபி, ஹைதராபாத் ஆகிய அணிகள் 14 புள்ளிகள் உடன் இருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் சிஎஸ்கே 12 புள்ளிகள் உடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நாங்கள் இதை செய்திருக்கிறோம்

இது குறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது ” குஜராத் இரண்டாவதாக பந்து வீசும் போது சிறப்பாக இருந்தார்கள் என்று நினைக்கிறேன். நான் முதலில் பந்து வீசிவிட்டு வெளியேறும் போது திருப்தியாகவே இருந்தேன். இந்த ஸ்கோரை எடுக்க முடியும் என்று நான் நம்பினேன். ஆனால் இரண்டாவதாக வந்த அவர்கள் சரியான நீளத்தில் பந்து வீசினார்கள். நாங்களும் அந்த நீளத்தில் கொஞ்ச நேரம் தாக்கு பிடித்து வீசி இருக்க வேண்டும்”

இதையும் படிங்க : உலகின் சிறந்த வீரர்தான் விராட் கோலி.. ஆனாலும் இந்த தப்பை செய்ய வச்சு நாங்கள் வீழ்த்துவோம் – கேகேஆர் பேட்டிங் கோச்

“எங்கள் அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் 400 ரன்கள் தாண்டி இந்த தொடரில் எடுத்திருக்கிறார்கள். இந்த போட்டி எங்களுக்கு மோசமாக அமைந்து விட்டதால் நாங்கள் மோசமான அணி கிடையாது. கடந்த ஐந்து, ஆறு போட்டிகளில் நாங்கள் நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறோம். இன்னும் எங்களுக்கு இரண்டு போட்டிகள் இருக்கிறது நாங்கள் வெற்றி பெற்று உள்ளே வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -