இந்திய கிரிக்கெட்

என்னோட புது பேவரைட் பிளேயர் சூரியவன்சிதான்.. கொஞ்சம் மிஸ் பண்ணாலும் முடிச்சிடுவாரு – கம்மின்ஸ் பாராட்டு

நேற்று தங்கள் அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூரியவன்சியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூரியவன்சி 12 மெகா சிக்ஸர்கள் அடித்தார். முதல் ஓவரில் மட்டும் நான்கு சிக்ஸர்கள் அடித்தார். மேலும் கம்மின்ஸ் பந்து வீச்சில் முதல் பந்தையை சிக்ஸருக்கு அடித்தார். அவரது ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.

அதிரடி சதம்

அவர் கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை வெறும் 14 வயதில் படைத்தார்.

தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் அடித்திருக்கிறார். அவர் பேட்டின் வேகம் யாரும் நம்ப முடியாத வகையில் மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் பெரிய அளவில் உள்ளது. எனவே பும்ரா வரையில் மிகத் துல்லியமாக அடிக்கிறார்.

- Advertisement -

என்னுடைய பேவரைட் பிளேயர்

இதுகுறித்து களத்திற்கு தற்போது திரும்பி இருக்கும் பேட் கம்மின்ஸ் பேசும்போது “வைபவ் சூரியவன்சிதான் இப்போது எனக்கு பிடித்த புதிய பேவரைட் பிளேயர் என்று நினைக்கிறேன். அவர் பந்தை மிக வேகமாக அடிக்கிறார். அதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது”

இதையும் படிங்க : சூரியவன்சி என்னை மன்னிச்சிடுபா.. சின்ன வயசுல லாராவுக்கு நாங்க செஞ்சத இவருக்கு செய்யணும் – கார்லஸ் பிராத்வய்ட் பேச்சு

“நீங்கள் அவருக்கு ஒரு பவுலராக மிகத்துல்லியமாக பந்து வீச வேண்டும். அப்படி இல்லையென்றால் அது உங்களுக்கு பெரிய பின்னடைவாக அமையும். இது மிகப் பிரமாதமான விஷயம். அவர் தனது தொழில் வாழ்க்கையை சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் ஆடும் விதம் எனக்கு பிடித்திருக்கிறது. ஆட்டத்தை தன் வசப்படுத்துகிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts