இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்சியின் சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் எப்படி அமைய வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்லஸ் பிராத்வய்ட் கூறியிருக்கிறார்.
நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி 36 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார். ஏற்கனவே கடந்த ஐபிஎல் சீசனில் 35 பந்துகளில் சதம் அடித்து அதிவேகமாக ஐபிஎல் சதம் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்திருந்தார்.
லாராவுக்கு செய்ததை செய்ய வேண்டும்
தற்போது அவரை உடனடியாக இந்திய அணியில் விளையாட அறிமுகப்படுத்த வேண்டும் என வெளியில் இருந்து நிறைய பேர் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இதற்கு கார்லஸ் பிராத்வய்ட் மாறுபட்ட கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “என்னை மன்னிக்க வேண்டும் வைபவ். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் லாராவை எப்படி கையாண்டது என்று பாருங்கள். அவர் ஒரு தலைமுறை திறமையாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் என்ன செய்தது? அவரை முதலில் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களுடன் இணைத்து விட்டார்கள். அவரை உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தவில்லை. அவர் அறிமுகமாகாமலே அனுபவ வீரர்களுடன் இணைந்து சுற்றுப்பயணங்கள் செய்து நிறைய கற்றுக் கொண்டார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் வாழ்க்கை எப்படி மாறியது என்று பார்த்தோம்”
இதையே செய்ய வேண்டும்
“எனவே இந்த சிறுவனையும் தற்போது இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இருக்கும்போது இணைத்து விட வேண்டும். இவர் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பிறகு இவரை நாம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யலாம்”
இதையும் படிங்க: இஷான் ஒரு விஷயத்தை அற்புதமா செய்வார்.. நான் வரதுக்கு முன்ன இந்த டீமை ரொம்ப அழகா வச்சிருந்தார் – பேட் கம்மின்ஸ் பாராட்டு
“இவர் விளையாடுவதை பார்க்க ஒரு மனிதனாக என்னை தகுதியற்றவனாக உணர வைக்கிறது. இவர் 15 வயதில் பும்ரா போன்ற பவுலரை அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நானும் இந்த வயதில் என் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தேன். இதுதான் ஐபிஎல். இதற்கு 1.8 பில்லியன் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இங்கிருந்து ஒரு 15 வயது கதாநாயகனை கண்டுபிடிக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.






