ஹாட்ரிக் எடுத்ததுல பெரிய சந்தோசம் இல்ல.. அதுல இதுதான் எனக்கு முக்கியமான விஷயமா இருந்தது – பாட் கம்மின்ஸ் பேட்டி

0
107
Cummins

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. மலையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அந்த அணியின் பந்துவீச்சு மிகத்திட்டமிடப்பட்டதாக புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த நிலையில் பங்களாதேஷ் அணியின் அனுபவ வீரர்கள் ரன்கள் இல்லாமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

களத்தில் நின்று விளையாடிய கேப்டன் நஜீபுல் சாந்தோ 36 பந்தில் 41, தவ்ஹீத் ஹ்ரிடாய் 28 பந்தில் 40 ரன்கள் என இளம் வீரர்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பாட் கம்மின்ஸ் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தரப்பில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதில் மகமதுல்லா, மெகதி ஹசன் விக்கெட்டை 19ஆவது ஓவரின் ஐந்தாவது ஆறாவது பந்தில் கைப்பற்றி, இருபதாவது ஓவரின் முதல் பந்தில் செட் ஆகி விளையாடிய தவ்ஹீத் ஹ்ரிடாய் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா, மழையின் காரணமாக 28 ரன்கள் வித்தியாசத்தில் டேவிட் வார்னர் அரைசதத்துடன் வெற்றி பெற்றது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய பாட் கம்மின்ஸ் “அந்த சமயத்தில் எனக்கு ஹாட்ரிக் குறித்து எதுவும் தெரியாது. நான் இருபதாவது ஓவரை வீச வந்த பொழுது திரையில் ஹாட்ரிக் குறித்து காட்டப்பட்டது. ஆனால் எனக்கு செட் ஆகி இருந்த தவ்ஹீத் ஹ்ரிடாய் விக்கெட்டை அந்த நேரத்தில் கைப்பற்றி, அவர்களை கட்டுப்படுத்த முடிந்ததுதான் மகிழ்ச்சி. பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஆஸ்டன் அகர் மற்றும் நாதன் எல்லீஸ் இருவரும் ஏற்கனவே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். ஜூனியர்களுடன் அந்த இழப்பில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : கம்மின்ஸ் ஹாட்ரிக்.. டி20 உ.கோ வரலாற்றில் ஆஸி புது உலகசாதனை.. பங்களாதேஷ் பரிதாப தோல்வி

இது எங்களுடைய மெருகூட்டப்பட்ட சிறந்த செயல் திறன். நாங்கள் வெற்றியை நோக்கி மட்டும்தான் விளையாடினோம். மேலும் எங்களுடைய ரன் ரேட் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தி விளையாடினோம்.சூப்பர் எட்டு சுற்றில் நாங்கள் இந்த வேகத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -