7 விக்கெட்ஸ் எடுத்தவருக்கு இடமில்லை; 2வது டெஸ்டில் இந்தியாவை எப்படி அடக்கனும்னு தெரியும்! – கம்மின்ஸ் பேட்டி!

0
2807

முதல் டெஸ்டில் 7 விக்கெட்ஸ் எடுத்தவருக்கு இடமில்லை என்று கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில் தெரியவந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்து ஆஸ்திரேலியாவிற்கு படுதோல்வியை கொடுத்தது.

- Advertisement -

இந்நிலையில் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் 15ம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.

அதில் இரண்டாவது டெஸ்டில் என்னென்ன மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது? மற்றும் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டனவா? என்பதற்கு பதில் கூறியிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்த அறிமுக வீரர் டாட் மர்பி 7 விக்கெட்ஸ் கைப்பற்றினார். அவர் இரண்டாவது டெஸ்டில் இருப்பது சந்தேகம் என தெரியவந்திருக்கிறது. மேலும் மேட் ரென்ஷா பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்றும், அதற்கு பதிலாக டிராவிஸ் ஹெட் மீண்டும் உள்ளே வரவுள்ளார். அதேபோல் கேமரூன் கிரீன் மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட இருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.

- Advertisement -

ஆனால் இருவரின் முழு உடல்தகுதி குறித்து 16ம் தேதி மாலை முழுமையாக தெரியவரும். அதைபொறுத்து முடிவுகள் மாறலாம் என்றும் பேட் கம்மின்ஸ் பேசினார். மேலும் பேசிய அவர், “இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சிருக்கு சாதகமான சூழல் இருக்கிறது. ஆகையால் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறோம். இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இன்னும் எங்களுக்கு சாதகமான சூழல் இருக்கின்றது. 100% அதற்காக முனைப்பில் இருக்கிறோம்.” என்று பேசினார்.