நாங்க உலக கோப்பையை ஜெயிக்கிறது இப்படிதான்.. அது பல காலத்துக்கு நினைவுல இருக்கனும் – பாட் கம்மின்ஸ் விளக்கம்

0
189
Cummins

தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு ஒரே கிரிக்கெட் ஆண்டில் இரண்டு ஐசிசி உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக பாட் கம்மின்ஸ் இருந்து வருகிறார். இவர் ஐசிசி கோப்பைகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து வெல்வது எப்படி? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

சமகாலத்தில் ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் இருவருக்கும் அடுத்து அவர்களைப் போல் அடையாளப்படுத்தக்கூடிய கேப்டன்களாக ஆஸ்திரேலியாவிற்கு யாரும் பெரிய அளவில் உருவெடுக்கவில்லை. மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்மித் இருவரும் இருந்திருந்தால் கூடஇவர்களின் புகழ் இல்லை.

- Advertisement -

இப்படியான நிலையில்தான் மிகவும் நெருக்கடியான நேரத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு பாட் கம்மின்ஸ் கேப்டனாக வந்தார். அந்த ஆண்டு ஆசஸ் தொடரை தக்கவைத்து, அடுத்து ஆசஸ் தொடரை வென்று, மீண்டும் ஆசஸ் தொடரை தக்க வைத்தார். மேலும் கடந்த ஆண்டில் மட்டும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை என இரண்டு ஐசிசி உலக கோப்பைகளை வென்றார்.

மேலும் இவர் அணிக்குள் வந்ததும் அனைவருக்கும் சமமான இடத்தை கொடுத்ததோடு, இனி ஆஸ்திரேலியா மற்ற எதிரணி வீரர்களை களத்தில் எதுவும் செய்யாது என்று வெளிப்படையாக அறிவித்தார். மேலும் பயிற்சியில் மிக கடுமையாக நடந்து கொண்ட பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு எதிராக இருந்து புதிய பயிற்சியாளரையும் கொண்டு வந்தார். இப்படி ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் சமீபத்தில் மிகவும் பெயர் பெற்ற ஒரு கேப்டனாக கம்மின்ஸ் உருவாகி இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அதிக உலகக் கோப்பைகளை வெல்வது எப்படி என்பது குறித்து பேசி இருக்கும் அவர் “ஐசிசி பட்டங்களை வெல்லும் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு அதிர்ஷ்டமும் இருப்பதை நாம் புறக்கணிக்க முடியாது. நாங்கள் இறுதிப் போட்டியை வழக்கமான ஒரு போட்டியாக கருதுவதற்கு நீண்ட நேரம் செலவழிக்கிறோம். மேலும் நாங்கள் அதை நீண்ட காலத்திற்கு மறக்க முடியாத அளவுக்கு செய்கிறோம். மேலும் விளையாட விரும்பும் விதத்தில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு இறுதிப் போட்டியின் நம்பிக்கையை இன்னொரு போட்டிக்கு எடுத்துச் சென்று வெற்றி பெறுவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மையில எங்களுக்கு பெரிய இழப்பு வேற.. நாங்க அவர்கிட்ட அப்படி ஒன்ன எதிர்பார்க்கல – சங்கக்கரா பேட்டி

எங்களுக்கு கடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் வீரர்களின் காயம் மற்றும் பார்ம் ஒரு சவாலான விஷயமாக இருந்தது. மேலும் நாங்கள் அன்னிய சூழ்நிலையில் முக்கியமான ஆட்டத்தில் எல்லோரும் சிறப்பாக திரும்பி வந்து வென்றோம். நாங்கள் தான் தற்போது டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்பது கிடையாது. வெல்லக்கூடிய அணிகளில் ஒருவராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.