உண்மையில எங்களுக்கு பெரிய இழப்பு வேற.. நாங்க அவர்கிட்ட அப்படி ஒன்ன எதிர்பார்க்கல – சங்கக்கரா பேட்டி

0
95
Sangakkara

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ஹைதராபாத் அணியிடம் இரண்டாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் அணியின் தோல்விக்கான காரணங்கள் குறித்து தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா பேசியிருக்கிறார்.

நேற்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் சேர்த்தது. குறிப்பிட்ட அந்த ஆடுகளத்தில் இது எட்டக்கூடிய இலக்காகவே தெரிந்தது. மேலும் ராஜஸ்தான் அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு51 ரன்கள் என்று பலமாகவே இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து பந்துவீச்சுக்கு வந்த பகுதி நேர இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் ஷாபாஷ் அகமத் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சேர்ந்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அப்படியே புரட்டி போட்டு விட்டார்கள். முடிவில் அந்த அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இதுகுறித்து பேசி இருக்கும் குமார் சங்கக்கரா கூறும்பொழுது ” நாங்கள் சரியான நேரங்களில் விக்கெட்டை இழந்து கொண்டிருந்தோம். மேலும் பவர் பிளேவில் நாங்கள் ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் என்று இருந்தோம். எங்களுக்கு மேற்கொண்டு 14 அல்லது 15 ஓவர்களில் 120 தேவைப்பட்டது. எங்களால் ஓவருக்கு கடைசியில் 10 அல்லது 11 ரன்கள் எடுக்க முடியும். இதற்கு கைவசம் விக்கெட்டுகள் இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் முதல் விக்கெட்டுக்கு பிறகு கொஞ்சம் பீதி அடைந்து அப்படியே விட்டு விட்டோம்.

நாங்கள் ரன்களை துரத்துவதில் இன்னும் கொஞ்சம் சரியாக இருந்திருக்க வேண்டும். இங்கு கேம்கள் மிகவும் கடினமாக இருக்கின்றன. ஜெயஸ்வால் ஆட்டம் இழந்தது தான் அவர்களது இடதுகை சுழல் பந்துவீச்சாளர்களை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தது. நாங்கள் ஷாபாஷ் அகமது பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை. அதற்குப்பிறகு விஷயங்கள் கடினமாக இருந்தன.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியாவுல சச்சினுக்கு அடுத்து.. இவருக்குத்தான் பெரிய வரவேற்பு இருக்கு – ஜஸ்டின் லாங்கர் கருத்து

டி20 உலகக்கோப்பை மிக நெருக்கத்தில் இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்கு திட்டரீதியாக ஒருங்கிணைந்த இருப்பதற்கு இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சென்று விட்டார்கள். சிறந்த வீரர் விளையாட வேண்டியது முக்கியம். இந்த வகையில் நாங்கள் ஜோஸ் பட்லரை இழந்தது பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.