ஹேசில்வுட்கிட்ட விசாரிச்சிட்டேன்.. நாங்க தப்பு பண்ண மாட்டோம் நம்புங்க – பாட் கம்மின்ஸ் விளக்கம்

0
306
Cummins

நேற்றைய டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி ஒமான் அணியை 3.1 ஓவரில் வெல்வதற்கு முன்பு வரை, இங்கிலாந்து அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஆஸ்திரேலியா அணியின் கைகளில் இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியிருந்தார். தற்போது அதற்கு பாட் கம்மின்ஸ் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணிகள் மோதும் போட்டியில், ஆஸ்திரேலியா அணி மெதுவாக சென்று போட்டியை வென்றால் கூட ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் சூழ்நிலை இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெளியேறும்.

- Advertisement -

இப்படியான நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஹேசில்வுட் இங்கிலாந்து அணி வெளியேறுவதையே ஆஸ்திரேலியா அணி விரும்பும், இங்கிலாந்து அணி அவர்களுடைய நாளில் பலம் வாய்ந்த அணி, எனவே இங்கிலாந்து தகுதி பெற்றால் அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடலாம், எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பொறுமையாக சென்று கூட வெல்லலாம் என்று பேசியிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையானது ஏனென்றால் எந்த ஒரு அணியும் தோல்வியை நோக்கியோ அல்லது இன்னொரு அணியை அடுத்த சுற்றுக்கு முன்னேற விடாமல் செய்வதற்கோ விளையாட கூடாது. தற்பொழுது ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியா அணியை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி நமீபியா எதிராக தோல்வி அடைய வேண்டும், அல்லது அந்தப் போட்டி மழையால் டிரா ஆகவேண்டும் என்று சூழ்நிலை மாறிவிட்டது.

- Advertisement -

தற்பொழுது ஹேசில்வுட் பேசியது பற்றி விளக்கம் கூறிய பாட் கம்மின்ஸ் “நான் இது குறித்து ஹேசில்வுட்டிடம் பேசினேன். அவர் இந்த விஷயத்தை நகைச்சுவையாக தான் கூறியிருக்கிறார். மேலும் இது அவுட் காண்டஸ்ட் ஆக இருந்தது. நாங்கள் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நல்ல முறையில் போட்டி அளித்து விளையாடவே முயற்சி செய்வோம். அவர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : சேவாக்கா அது யாரு?.. தன் மீதான விமர்சனம் குறித்த கேள்விக்கு ஷாகிப் அல் ஹசன் கோபம்

இது ரன் ரேட் பற்றிய விவாதமாக இருந்து வந்திருக்கிறது. யாரும் போட்டியை வெல்லாமல் இருப்பதற்காக விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. தற்போது டி20 உலகக்கோப்பையின் நடுவில் இருக்கிறோம். தோல்வியடைவதற்காக விளையாடினால் அது ஸ்பிரிட் ஆப் தி கேமுக்கு எதிரானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -