அது துபாய் ; இப்ப போட்டி நடக்கிறது மெல்போர்ன் – பாகிஸ்தான் அணியை எச்சரித்த பார்த்திவ் படேல்!

0
106
Pakistan

இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியோடு 10 விக்கெட் வித்தியாசத்தில் முதல் தோல்வியை தொடரில் சந்தித்ததால், அதுவே பெரிய அழுத்தம் ஆகி நியூசிலாந்து அணியோடு தோற்று தொடரை விட்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.

இந்த டி20 உலக கோப்பை தோல்வி இந்திய கிரிக்கெட்டை ஒரு புரட்டு புரட்டி விட்டது என்றே கூறலாம். புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர், புதிய ஆட்ட அணுகுமுறை, புதிய அணி கலாச்சாரம், புதிய வீரர்கள் என்று இந்திய அணி புதிதாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அப்போது ஆரம்பித்த நெருக்கடி இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பைக்கும் தொடர்கிறது.

- Advertisement -

வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், கடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போலவே இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இது இன்னும் நெருக்கடியை அதிகரிக்கிறது என்றே கூறலாம்.

அதே சமயத்தில் கடந்த டி20 உலகக் கோப்பை மற்றும் தற்போது நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இரண்டு ஆட்டங்கள் என இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதியது துபாய் மைதானத்தில். சூழல் பாகிஸ்தான் அணிக்கு மிகவும் பழக்கப்பட்டது. மேலும் ஆசிய கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் வென்று ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோற்று இருந்தது.

தற்போது இந்திய அணி டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியோடு மோதும் முதல் ஆட்டம் குறித்து, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் தனது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருக்கிறார்.

- Advertisement -

அவர் இதுகுறித்து கூறும் பொழுது “பெரிய தொடர்களில் முதல் போட்டியைச் சிறப்பாக தொடங்குவது மிகவும் முக்கியம். இவை நீண்ட போட்டிகள் கிடையாது. 50 ஓவர் உலகக்கோப்பை என்றால் ஒரு தோல்வியை ஈடுகட்ட நிறைய வாய்ப்புகள் இருக்கும். நீங்கள் டி20 உலக கோப்பையில் முதல் ஆட்டத்தை இழந்தால், உங்களின் மொத்த திட்டத்தையும் சந்தேகிக்க தொடங்கி விடுவீர்கள். மேலும் போட்டிகளில் மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஐபிஎல் தொடரில் அணிகள் மீண்டு வருவதை பற்றி நாம் பேசுகிறோம். அங்கு ஒரு அணிக்கு 14 ஆட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு அப்படி கிடையாது பாகிஸ்தான் இல்லை சவுத்ஆப்பிரிக்கா அணியைக் கட்டாயம் வீழ்த்திய ஆகவேண்டும் ” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய பார்த்திவ் படேல் ” பாகிஸ்தான் அணிக்கும் இதே நெருக்கடிகள் உண்டு. அவர்களும் வித்தியாசமான மனநிலையுடன் தான் வருவார்கள். அவர்கள் கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்துவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். இப்போது ஆசிய கோப்பையிலும் அதற்கு முன்பும் ஒருமுறை வீழ்த்தி இருக்கிறார்கள். டி20 உலக கோப்பையில் கட்டாயம் நிச்சயமாக வித்தியாசமாக யோசிப்பார்கள். அவர்கள் இந்த முறை இந்திய அணியை தோற்கடிக்க நிச்சயம் முயற்சி செய்வார்கள். ஆனால் உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியால் இந்திய அணியைத் தொடர்ந்து தோற்கடிக்க முடியாது ” என்று கூறியிருக்கிறார்.