“அஸ்வினும் தீபக் ஹூடாவும் தேவையில்லை; இவர்தான் வேண்டும்” – பார்த்திவ் படேல்!

0
234
Parthiv patel

வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆறு ஆகிய அணிகளை கொண்டு ஆசிய கோப்பை தொடர் 20 வடிவத்தில் துவங்க இருக்கிறது. எனக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், காயத்திலிருந்து அணிக்கு திரும்பிய கே.எல் ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் ஆச்சரியமாக ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் என நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னொருபுறம் புவனேஸ்வர் குமார், அர்ஸ்தீப் சிங், ஆவேஸ் கான் என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், தீபக் சஹர் ஆகிய மூன்று வீரர்களும் ஒருத்தரும் வீரர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது ஆசிய கோப்பை கால அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியை பற்றிய சலசலப்புகள் ஏதும் இல்லை என்றாலும், அணியில் முகமது சமி அக்சர் படேல் இருவரையும் கொண்டு வராதது முன்னாள் வீரர்கள் இடையே விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

எனது அரசு எமிரேட்ஸ் ஆடுகளங்களில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என்று சென்றுள்ளது பலரையும் குழப்பி உள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு ஏன் அணியில் இடமில்லை என்பதும் புரியவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இல்லாததும் மேலும் குழப்பத்தையும் விவாதத்தையும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான பார்த்திவ் படேல் கூறும்பொழுது ” அஸ்வினி கடந்த டி20 உலக கோப்பையில் முயற்சித்து பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு வெஸ்ட்இண்டீஸ் தொடரில் தான் மீண்டும் வாய்ப்பு தந்தார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் பயன்படுத்துவார்கள் என்று தெரியாது. அஸ்வினுக்கு தீபக் ஹூடா மாற்றாய் இருக்கும்பொழுது, ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாய் அக்ஷர் படேலை எடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” யுனைடெட் அரபு எமிரேட் ஆடுகளங்களின் கண்டிஷனில் இந்தியா 4 ஸ்பின்னர்கள் ஓடிப்போய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடு போயிருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் இவர்கள் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களோடு போயிருக்க வேண்டும். போன ஆண்டிற்கு முன்பு யுனைடெட் அரபு எமிரேட்டில் நடந்த ஐபிஎல் தொடரில் அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிற்கு ஒத்துழைத்ததை நாம் பார்த்தோம். இந்த வகையில் நாம் ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் குறைவாய் கொண்டு சென்று இருக்கிறோம். அக்ஷர் படேலை தீபக் ஹூடா இல்லை அஸ்வினிற்குப் பதிலாய் அணியில் எடுத்திருக்க வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார்.