பாசாங்கு செய்பவரா சூரியகுமார் மாற போறார்.. யுஏஇ கிட்ட செஞ்சதை பாகிஸ்தானிடம் செய்ய முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
37
Akash

நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் காட்டிய பெருந்தன்மையை நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் காட்ட மாட்டார் என ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தற்போதைய பார்ம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

சூரியகுமார் காட்டிய பெருந்தன்மை

நேற்றைய போட்டியில் சிவம் துபே பந்துவீச்சில் யுஏஇ வீரர் ஜுனைட் சித்திக் பந்தை கீப்பரிடம் தவறவிட்டு கிரீஸ்க்குள் செல்லாமல் கவன குறைவாக வெளியில் இருந்தார். இந்த நேரத்தில் சஞ்சு சாம்சங் மிகச் சிறப்பாக செயல்பட்டு பந்தை ஸ்டெம்பில் அடித்து அவுட் கேட்டார்.

மேலும் கள நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் சென்ற பொழுது வீடியோ ஆதாரத்தில் அவுட் என மிகத் தெளிவாகத் தெரிந்தது. இந்த நிலையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அந்த அவுட் வேண்டாம் என மறுத்துவிட்டார். அவர் போட்டி உத்வேகத்திற்கு சிறப்பான முறையில் நடந்து கொண்டார் என வெளியில் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பாசாங்குத்தனமாக மாறிவிடும்

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” எனது கருத்துப்படி இதுவெல்லாம் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து முடிவெடுக்கப்படுகிறது. இதுவே 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் சல்மான் அலி ஆகா இருந்திருந்தால் நிச்சயம் சூரியகுமார் யாதவ் வேண்டாம் எனக் கூறியிருக்க மாட்டார்”

இதையும் படிங்க : சாம்சனை வச்சே ஸ்ரேயாஸை கொண்டு வர போறாங்க.. நம்ம கேரளா பையன் ஏமாற போறாரு – ஸ்ரீகாந்த் கருத்து

“நீங்கள் இப்படி பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் பொழுது ஒரு சிக்கல் உருவாகிறது. நாளை நீங்கள் இதேபோல ஒரு அவுட்டை வாங்கிக் கொண்டால், உடனே ஏன் இப்படி பாசாங்காக இருக்கிறீர்கள்? அன்று அவுட்டை வேண்டாம் என்ற நீங்கள் இன்று ஏன் வாங்கினீர்கள்? என்று வெளியில் இருந்து விமர்சனங்கள் வரும். ஆனாலும் இதுவெல்லாம் எதிரில் இருப்பது யார்? போட்டி சூழ்நிலை என்ன? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -