ரிஷாப் பண்ட்டும், சூர்யகுமாரும் துவக்க வீரராக வருவது இந்த வீரருக்காகத்தான் – பார்த்திவ் படேல்

0
151
Parthiv patel and virat kohli

தற்போதைய இந்திய அணியைக் குறுகிய காலக்கட்டத்தில் ஏழு கேப்டன்கள் வழிநடத்தி இருக்கிறார்கள். உலகத்தில் எந்தப் பயிற்சியாளருக்கும் இது நடந்திருக்காது. இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நகர, அடுத்து தலைமைப் பயிற்சியாளராக வந்த ராகுல் டிராவிட்டுக்கு இது நடக்கிறது!

இது மட்டும் இல்லாமல் சமீபக் காலத்தில் இந்திய அணிக்கு ருதுராஜ், இஷான் கிஷான், ரிஷாப் பண்ட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் என நிறைய வீரர்கள் துவக்க ஆட்டக்காரர்களாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அணியில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கிறது!

- Advertisement -

நேற்று வெஸ்ட் இன்டீஸ் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் இன்னொரு துவக்க ஆட்டக்காரராக நம்பர் 4ல் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட்டார். கே.எல்.ராகுல் இல்லாத பொழுது, ரிஷாப் பாண்ட் இங்கிலாந்துடனான டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார். ஆனால் அடுத்த வெஸ்ட் இன்டீஸ் தொடரில் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்படுகிறார். இவர் இங்கிலாந்துடனான டி20 தொடரில் நம்பர் 4ல் களமிறங்கி சதம் விளாசி இருந்தார்!

இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் ஏன் மாற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. அதுவும் கே.எல்.ராகுல் இல்லையென்றால் ரிஷாப் பண்ட்டையோ இல்லை இஷான் கிஷானையோ துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்காமல் சூர்யகுமாரை ஏன் துவக்க ஆட்டக்காரராகக் களமிறக்க வேண்டும்?

தற்போது இந்தக் கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் “விராட் கோலி ஒரு ஜாம்பவான் வீரர். தொடக்க வரிசையில் நாம் பார்க்கும் இந்த மாற்றங்கள் அனைத்தும், அணி நிர்வாகம் விராட் கோலியை அணியில் பொருத்த நினைப்பதால் நடக்கிறது. அதனால்தான் ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் துவக்க வீரர்களாகக் களமிறக்கப்படுவதாக நான் உணர்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்!

- Advertisement -

மேலும் பார்த்திவ் படேல் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்துத் தெரிவிக்கையில் “அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் ரன்கள் எடுக்க நிறைய நேரம் இருக்கும். பார்ம்க்கு திரும்புவது கடினமில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்!